PT 9.7.5

வல்லவாழ் என்று சொல்லும் திட்பம் வேண்டும்

1812 மஞ்சுதோய்வெண்குடைமன்னராய் வாரணம்சூழ வாழ்ந்தார் *
துஞ்சினாரென்பதோர்சொல்லைநீ துயரெனக்கருதினாயேல் *
நஞ்சுதோய்கொங்கைமேல்அங்கைவாய்வைத்து அவள் நாளையுண்ட *
மைந்தனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1812 mañcu toy vĕṇ kuṭai maṉṉar āy * vāraṇam cūzha vāzhntār *
tuñciṉār ĕṉpatu or cŏllai * nī tuyar ĕṉak karutiṉāyel **
nañcu toy kŏṅkaimel am kai vāy vaittu * aval̤ nāl̤ai uṇṭa
mañcaṉār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 5

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1812. O, heart, you know that the kings with white umbrellas that touched the clouds, rulers surrounded by many elephants, have suffered and passed from this world. If you do not want to suffer like they did, go to Thiruvallavazh where the god stays who drank milk from Putanā’s breasts and killed her, praise and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; மஞ்சு மேகமண்டலத்தளவு; தோய் ஓங்கிய; வெண் குடை வெண்கொற்றக்குடையுடைய; மன்னர் ஆய் அரசர்களாய்; வாரணம் சூழ யானைகள் சூழ; வாழ்ந்தார் வாழ்ந்தவர்கள்; துஞ்சினார் மாண்டு போனார்கள்; என்பது என்கிற; ஓர் சொல்லை வார்த்தையை; நீ துயர் என நீ துயர் என; கருதினாயேல் கருதினாயானல்; நஞ்சு தோய் விஷம்தோய்ந்த; கொங்கை மேல் பூதனையின் மார்பின் மேல்; அம் கை அழகிய கையையும்; வாய் வாயையும்; வைத்து அவள் வைத்து அவள்; நாளை உண்ட ஆயுளை முடித்த; மஞ்சனார் சிறுவனான கண்ணன் வாழும்; வல்லவாழ் இடமான திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்