PT 9.7.4

உய்யவேண்டுமா? வல்லவாழ் நினை

1811 பண்ணுலாம்மென்மொழிப்பாவைமார் பணைமுலையணைதும்நாமென்று *
எண்ணுவாரெண்ணமதொழித்து நீபிழைத்துயக்கருதினாயேல் *
விண்ணுளார்விண்ணின்மீதியன்றவேங்கடத்துளார்வளங்கொள்முந்நீர் *
வண்ணனார்வல்லவாழ் சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே!
1811 paṇ ulām mĕṉ mŏzhip pāvaimār * paṇai mulai aṇaitum nām ĕṉṟu *
ĕṇṇuvār ĕṇṇam-atu ŏzhittu * nī pizhaittu uyak karutiṉāyel **
viṇ ul̤ār viṇṇiṉ mītu iyaṉṟa * veṅkaṭattu ul̤ār * val̤aṅkŏl̤ munnīr
vaṇṇaṉār vallavāzh * cŏllumā vallai āy maruvu nĕñce 4

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1811. O heart, if you want to survive and get away from the thought that you want to embrace the round breasts of statue-like women with words as soft as music, then go to Thiruvallavāzh where the god of gods in the sky, the rich ocean-colored lord of the Thiruvenkatam hills, stays and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; பண் உலாம் இசைகலந்த; மென் இனிமையான; மொழி பேச்சையுடைய; பாவைமார் பெண்களின்; பணை முலை திரண்ட மார்பகங்களை; நாம் நாம்; அணைதும் என்று அணைவோமென்று; எண்ணுவார் சிந்திப்பவர்களின்; எண்ணம் அது எண்ணத்தை; ஒழித்து ஒழித்து; நீ பிழைத்து நீ தப்பி; உய்ய பிழைத்துப் போக; கருதினாயேல் கருதினாயானால்; விண் உளார் நித்யஸூரிகளுக்காக; விண்ணின் மீது பரமபதத்தில்; இயன்ற காட்சிகொடுப்பவரும்; வேங்கடத்து திருவேங்கடமலையில்; உளார் இருப்பவரும்; முந்நீர் கடல் போன்றவருமானவர்; வளங் கொள் வாழும் இடமான; வல்லவாழ் திருவல்லவாழ் என்று; சொல்லுமா வாயாரச் சொல்லி உய்வு பெரும்; வல்லை ஆய் வல்லமையுடையவரை; மருவு அடைவாய்