PT 8.5.8

தலைவன் வரவில்லை: இதனினும் கொடிய வினை இல்லை

1695 முழுதிவ்வையகம்முறைகெடமறைதலும் முனிவனும்முனிவெய்தி *
மழுவினால்மன்னராருயிர்வவ்விய மைந்தனும்வாரானால் *
ஒழுகுநுண்பனிக்கொடுங்கியபேடையை அடங்கஅஞ்சிறைகோலி *
தழுவுநள்ளிருள்தனிமையின்கடியது ஓர்கொடுவினையறியேனே.
1695 muzhutu iv vaiyakam muṟai kĕṭa maṟaitalum *
muṉivaṉum muṉivu ĕyti *
mazhuviṉāl maṉṉar ār uyir vavviya *
maintaṉum vārāṉāl **
ŏzhuku nuṇ paṉikku ŏṭuṅkiya peṭaiyai *
aṭaṅka am ciṟai koli *
tazhuvum nal̤ irul̤ taṉimaiyiṉ kaṭiyatu or *
kŏṭu viṉai aṟiyeṉe-8

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1695. (kannapuram) She says, “Kannan the brother of the sage BalaRāman who became angry at the unjust enemy kings and killed them with his mazhu weapon has not come to see me. The male bird with beautiful wings embraces his mate shivering in the terrible dew dripping everywhere. Is there anything more cruel than the loneliness I have on this dark night? I don’t know what bad karmā I must have done to suffer like this. The young god I love so much has not come. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவ் வையகம் இந்த உலகம்; முழுது முழுவதிலும்; முறை கெட மரியாதை குறைந்து; மறைதலும் போனதால்; முனிவனும் ஜமதக்நி முனிவன்; முனிவு எய்தி சீற்றம் கொண்டு; மழுவினால் கோடாலியால்; மன்னர் க்ஷத்ரிய மன்னர்களின்; ஆர் உயிர் அருமையான உயிரை; வவ்விய போக்கினவரான; மைந்தனும் பரசுராமனும்; வாரானால் வரவில்லையே அந்தோ!; ஒழுகு நுண் பனிக்கு பெருகும் சிறு பனிக்காக; ஒடுங்கிய ஒடுங்கிக் கொண்டிருக்கும்; பேடையை பெண் பறவையை; அம் சிறை கோலி தன் அழகிய சிறகுகளை விரித்து; அடங்க அடங்கும்படியாக; தழுவும் அணைத்துக் கொள்கிறது ஆண் பறவை; நள் இருள் இந்த நடு இருளில்; தனிமையின் தனிமையை; கடியது ஓர் காட்டிலும் வேறு ஒரு; கொடு வினை கொடிய வினை; அறியேனே! அறியேனே