PT 8.3.9

அரவணையானால் என் வளைகள் அகன்றன

1676 வாராளும்இளங்கொங்கை நெடும்பணைத்தோள்மடப்பாவை *
சீராளும்வரைமார்பன் திருக்கண்ணபுரத்துறையும் *
பேராளன்ஆயிரம்பேர் ஆயிரவாயரவணைமேல் *
பேராளர்பெருமானுக்கு இழந்தேன்என்பெய்வளையே.
1676 vār āl̤um il̤aṅ kŏṅkai * nĕṭum paṇait tol̤ maṭap pāvai *
cīr āl̤um varai mārvaṉ * tirukkaṇṇapurattu uṟaiyum **
perāl̤aṉ āyiram per * āyira vāy aravu-aṇaimel *
perāl̤ar pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ pĕy val̤aiye-9

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1676. She says, “My bangles grow loose and fall from my arms because I love the generous lord with a thousand names who rests on the thousand-tongued Adisesha. He stays in Thirukannapuram embracing on his mountain-like chest the beautiful Lakshmi with arms like bamboo and young breasts secured with a band. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் ஆளும் கச்சோடு கூடின; இளம் கொங்கை மார்பகங்களையுடைய; நெடும்பணை நீண்ட மூங்கில் போன்ற; தோள் தோள்களையுடைய; மட பவ்யமான பதுமை போன்றவளான; பாவை திருமகள் இருக்கும்; சீர் ஆளும் சீர்மையான செல்வத்தை உடைய; வரை மலைபோன்ற; மார்வன் மார்பையுடையவன்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; பேராளன் பெருமையுடையவன்; ஆயிரம் பேர் ஆயிரம் நாமங்களையுடையவன்; ஆயிரவாய் ஆயிரம் முகங்களுடைய; அரவணை ஆதிசேஷன்; மேல் மேல் சயனித்திருக்கும்; பேர் ஆளர் பெருமையுடைய; பெருமானுக்கு பெருமானுக்கு; என் பெய் எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்