PT 7.8.5

நரசிம்மாவதாரம் எடுத்தவன் இவனே

1622 சினமேவும்அடலரியினுருவமாகித்
திறல்மேவும்இரணியன்தாகம்கீண்டு *
மனமேவுவஞ்சனையால்வந்தபேய்ச்சி
மாள உயிர்வெளவிய எம்மாயோன்காண்மின் *
இனமேவுவரிவளைக்கையேந்தும் கோவை
யேய்வாயமரகதம்போல் கிளியினின்சொல் *
அனமேவுநடைமடவார்பயிலும் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1622 ciṉam mevum aṭal ariyiṉ uruvam ākit *
tiṟal mevum iraṇiyaṉatu ākam kīṇṭu *
maṉam mevu vañcaṉaiyāl vanta peycci
māl̤a * uyir vavviya ĕm māyoṉ kāṇmiṉ- **
iṉam mevu vari val̤aik kai entum kovai *
ey vāya marakatampol kil̤iyiṉ iṉ cŏl *
aṉam mevu naṭai maṭavār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-5

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1622. As a heroic man-lion he split open the strong chest of Hiranyan, and when the devil Putanā came in the form of a mother to cheat him he drank her poisonous milk and killed her. See, he is the Māyon and he stays happily in rich Thiruvazhundur where beautiful women come with their friends, their arms ornamented with round bangles, walking like swans and teaching sweet words to their emerald-colored parrots with mouths like red kovvai fruits.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இனம் மேவு வரிசை வரிசையாக; வரி வளை வளையல்கள் அணிந்த; கை ஏந்தும் கைகளிலே வைத்திருக்கும்; கோவை கோவைப் பழம்; ஏய் வாய போன்ற வாயையுடைய; மரகதம் மரகதம் போன்ற; போல் பச்சை நிறமுடைய; கிளியின் கிளியைப் போன்ற; இன் சொல் இனிய சொற்களையும்; அனம் மேவு அன்னம் போன்ற; நடை நடையழகையுமுடைய; மடவார் இளம் பெண்களின்; பயிலும் செல்வத்து செல்வம் பெற்ற; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; சினம் மேவும் அடல் மிக்க சீற்றமுள்ள வலிய; அரியின் உருவம் ஆகி நரசிம்ம மூர்த்தியாய்; திறல் மேவும் மிக்க பராக்ரமமுள்ள; இரணியனது இரணியனின்; ஆகம் கீண்டு மார்பைப் பிளந்து; மனம் மனதில்; மேவு வஞ்சனையால் வஞ்சக எண்ணத்தோடு; வந்த பேய்ச்சி மாள வந்த பேய்ச்சி மாள; உயிர் வவ்விய அவள் உயிரை வாங்கிய; எம் மாயோன் எம் மாயோனை; காண்மின் கண்டு களியுங்கள்