PT 7.5.9

என் ஐம்புலன்களையும் கவர்ந்தவர் ஊர் இது

1596 என்னைம்புலனும்எழிலுங்கொண்டு இங்கேநெருநல்எழுந்தருளி *
பொன்னங்கலைகள்மெலிவெய்தப்போன புனிதர்ஊர்போலும் *
மன்னுமுதுநீரரவிந்தமலர்மேல் வரிவண்டுஇசைபாட *
அன்னம்பெடையோடுஉடனாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1596 ĕṉ aimpulaṉum ĕzhilum kŏṇṭu * iṅke nĕrunal ĕzhuntarul̤i *
pŏṉ am kalaikal̤ mĕlivu ĕytap * poṉa puṉitar ūrpolum- **
maṉṉum mutu nīr aravinta malarmel * vari vaṇṭu icai pāṭa *
aṉṉam pĕṭaiyoṭu uṭaṉ āṭum * aṇi ār vayal cūzh azhuntūre-9

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1596. That pure lord who came yesterday, stole away the feelings of my five senses and my beauty, and made my golden ornaments loose and left me - stays in Thiruvazhundur surrounded with flourishing fields where lined bees swarm on the lotuses in the ponds with water that never dries up as male swans play with their mates.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு மீன்கள் வாழும்; முது நீர் பழைய குளங்களிலிருக்கும்; அரவிந்த மலர் மேல் தாமரை மலர் மேல்; வரி வண்டு இசை பாட வரி வண்டு இசை பாட; அன்னம் பெடையோடு அன்னம் பெடையோடு; உடன் ஆடும் உடன் ஆடும் ஊர்; அணியார் வயல் சூழ் அணியார் வயல் சூழ்ந்த; அழுந்தூரே திருவழுந்தூரே; இங்கே நெருநல் இங்கே நேற்று நானிருந்த; எழுந்தருளி இடத்தில் வந்து; என் ஐம் புலனும் என் பஞ்சேந்திரிய அறிவையும்; எழிலும் என் அழகையும்; கொண்டு கவர்ந்து கொண்டு; பொன் அம் மிக அழகிய; கலைகள் என் ஆடைகள்; மெலிவு தளர்ந்து விழும்படி; எய்த என்னை விட்டுப் பிரிந்து; போன புனிதர் ஊர் போன புனிதர் ஊர்; போலும் திருவழுந்தூர்