PT 7.5.10

இப்பாடல்களைப் பாடினால் பாவம் நீங்கும்

1597 நெல்லில்குவளைகண்காட்ட நீரில்குமுதம்வாய்காட்ட *
அல்லிக்கமலம்முகங்காட்டும் கழனிஅழுந்தூர்நின்றானை *
வல்லிப்பொதும்பில்குயில்கூவும் மங்கைவேந்தன்பரகாலன் *
சொல்லில்பொலிந்ததமிழ்மாலை சொல்லப்பாவம்நில்லாவே. (2)
1597 ## nĕllil kuval̤ai kaṇ kāṭṭa * nīril kumutam vāy kāṭṭa *
allik kamalam mukam kāṭṭum * kazhaṉi azhuntūr niṉṟāṉai **
vallip pŏtumpil kuyil kūvum * maṅkai ventaṉ parakālaṉ *
cŏllil pŏlinta tamizh-mālai * cŏllap pāvam nillāve 10

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1597. Kaliyan, the poet who fights with his enemies like Yama, the king of Thirumangai where cuckoo birds sit on the bushes that are covered with flourishing vines, composed ten Tamil pāsurams with rich words praising the god of Thiruvazhundur where blooming kuvalai flowers are like women’s eyes, kumudam flowers in the water are like their mouths and the alli flowers are bright like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெல்லில் நெற்பயிரினிடையே; குவளை முளைத்த கருநெய்தற் பூக்கள்; கண் அவ்வூர் பெண்களின் கண்கள்; காட்ட போன்றது; நீரில் நீரிலே முளைத்த; குமுதம் ஆம்பல் பூக்கள்; வாய் அவர்களின் வாய்; காட்ட போன்றது; அல்லிக் இதழ்களுடைய; கமலம் தாமரைப் பூக்கள்; முகம் அவர்களது; காட்டும் முகம்போன்றதுமான; கழனி வயல்களையுடைய; அழுந்தூர் திருவழுந்தூர்; நின்றானை பெருமானைக் குறித்து; வல்லிப் கொடிகளுள்ள; பொதும்பில் புதர்களிலே; குயில் கூவும் குயில்கள் கூவும்; மங்கை திருமங்கை நாட்டு; வேந்தன் தலைவனான; பரகாலன் திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த; சொல்லில் நல்ல சொற்களினால்; பொலிந்த நிறைந்த; தமிழ் மாலை பாசுரங்களை; சொல்ல அனுஸந்திக்க; பாவம் பாவங்கள்; நில்லாவே அவர்களிடத்தில் தங்காது