PT 7.3.5

கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்

1572 ஆங்குவெந்நரகத்துஅழுந்தும்போது
அஞ்சேலென்றுஅடியேனை அங்கேவந்து
தாங்கு * தாமரையன்னபொன்னாரடி
எம்பிரானை உம்பர்க்கணியாய்நின்ற *
வேங்கடத்தரியைப்பரிகீறியை
வெண்ணெயுண்டுஉரலினிடையாப்புண்ட
தீங்கரும்பினை * தேனைநன்பாலினையன்றி
என்மனம்சிந்தைசெய்யாதே.
1572 āṅku vĕm narakattu azhuntumpotu *
añcel ĕṉṟu aṭiyeṉai aṅke vantu
tāṅku * tāmarai aṉṉa pŏṉ ār aṭi
ĕmpirāṉai * umparkku aṇi āy niṉṟa **
veṅkaṭattu ariyai pari kīṟiyai *
vĕṇṇĕy uṇṭu uraliṉiṭai āppuṇṭa
tīṅ karumpiṉai * teṉai naṉ pāliṉai
aṉṟi * ĕṉ maṉam cintai cĕyyāte-5

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1572. The lotus-eyed Lord of Naraiyur, precious like gold, saying “Do not be afraid, ” will come and help me when I, his slave, am plunged into cruel hell. He, the jewel of the gods in the sky and the lion of Thiruvenkatam, killed the Asuran when he came as a horse. When Yashodā tied him to a mortar when he stole butter, he was sweet as sugarcane. He is like honey and good milk and my mind will not think of anyone except him

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆங்கு வெம் அந்த கொடிய; நரகத்து நரகங்களிலே; அழுந்தும்போது அழுந்தி வருந்தும் போது; அங்கே வந்து அங்கே வந்து; அஞ்சேல் என்று பயப்படவேண்டாமென்று; அடியேனை தாங்கு என்னைப் பார்த்தருளும்; தாமரை அன்ன தாமரை போன்ற; பொன் ஆர் பொன் போன்ற அழகிய; அடி பாதங்களையுடைய; எம்பிரானை பெருமானை; உம்பர்க்கு தேவர்களுக்கு; அணியாய் நின்ற அலங்காரமாயிருக்கும்; வேங்கடத்து வேங்கடத்திலிருக்கும்; அரியை சிங்கம் போன்றவனும்; பரி குதிரை உருவாய் வந்த அசுரன்; கீறியை வாயைக் கிழிந்தவனும்; வெண்ணெய் உண்டு வெண்ணெய் உண்டு; உரலினிடை ஆப்புண்ட உரலோடு கட்டுப்பட்டவனும்; தீங் கரும்பினை இனிய கரும்பு போன்றவனும்; தேனை தேன் போன்றவனும்; நல் நல்ல; பாலினை பாலைப் போன்றவனுமான பெருமானை; அன்றி என் மனம் தவிர என் மனம் மற்றவரை; சிந்தை செய்யாதே நினைக்காது