PT 7.10.3

நான் தேடிய தெய்வம் பக்தவத்சலனே

1640 எங்களுக்குஅருள்செய்கின்றஈசனை
வாசவார்குழலாள்மலைமங்கைதன்
பங்கனை * பங்கில்வைத்துகந்தான்றன்னைப்
பான்மையைப்பனிமாமதியம்தவழ் *
மங்குலைச்சுடரைவடமாமலை
யுச்சியை நச்சிநாம்வணங்கப்படும்
கங்குலை * பகலைச்சென்றுநாடிக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.
1640 ĕṅkal̤ukku arul̤cĕykiṉṟa īcaṉai *
vāca vār kuzhalāl̤ malai-maṅkai-taṉ
paṅkaṉai * paṅkil vaittu ukantāṉ * taṉṉaip
pāṉmaiyaip paṉi mā matiyam tavazh **
maṅkulaic cuṭarai vaṭa mā malai
ucciyai * nacci nām vaṇaṅkappaṭum
kaṅkulai * pakalai-cĕṉṟu nāṭik *
kaṇṇamaṅkaiyul̤ kaṇṭukŏṇṭeṉe-3

Ragam

Tōdi / தோடி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1640. Our Esan, who resides in Thiruvenkatam with a wonderful nature gives us his grace and happily keeps on his body Shivā with the beautiful fragrant-haired Girija, the daughter of Himavan. He shines on the peak of the northern mountain in Thiruvenkatam where the cool moon floats in the sky. I searched for him who is night and day and found him in Thirukannamangai. We all love and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்களுக்கு அருள் எங்களுக்கு அருள்; செய்கின்ற ஈசனை செய்யும் பெருமானாய்; வாச வார் குழலாள் மணமுடைய கூந்தலையுடையவளை; மலை மங்கை இமயமலைக்கு பெண்ணான பார்வதியை; தன் பங்கனை தன் பார்ஸ்வத்திலே உடைய ருத்ரனை; பங்கில் வைத்து தன் திருமேனியின் ஒரு பக்கத்தில் இருத்தி; உகந்தான் தன்னை உகந்தவனாய்; பான்மையை இப்படிப்பட்டநீர்மை ஸ்வபாவமுடைய; பனி மா குளிர்ந்தும் பரந்தும் இருக்கும்; மதியம் தவழ் சந்திரனுடைய அழகிய ஸஞ்சாரம் பண்ணும்; மங்குலை ஆகாசத்துக்கு நிர்வாஹகனாய்; சுடரை சூரியனுக்கு அந்தர்யாமியாய்; வட மா மலை வடக்கிலுள்ள திருவேங்கடமலையின்; உச்சியை உச்சியிலிருக்கும் பெருமானை; நச்சி நாம் ஆசைப்பட்டு நாம்; வணங்கப்படும் வணங்கும்; கங்குலை பகலை இரவுக்கும் பகலுக்கும் நிர்வாஹகனை; சென்று நாடி சென்று நாடி; கண்ணமங்கையுள் திருக்கண்ண மங்கையில்; கண்டுகொண்டேனே கண்டுகொண்டேனே