PT 6.9.3

மனமே! நறையூரில் கண்ணபிரான்தான் உள்ளான்

1530 சுளைகொண்டபலங்கனிகள் தேன்பாய * கதலிகளின்
திளைகொண்டபழம்கெழுமு திகழ்சோலைத்திருநறையூர் *
வளைகொண்டவண்ணத்தன் பின்தோன்றல் * மூவுலகோடு
அளைவெண்ணெயுண்டான்தன் அடியிணையேஅடைநெஞ்சே!
1530 cul̤ai kŏṇṭa palaṅkaṉikal̤ * teṉ pāya * katalikal̤iṉ
til̤ai kŏṇṭa pazham kĕzhumu * tikazh colait tirunaṟaiyūr ** -
val̤ai kŏṇṭa vaṇṇattaṉ * piṉ toṉṟal * mūvulakoṭu
al̤ai vĕṇṇĕy uṇṭāṉ-taṉ * -aṭi-iṇaiye aṭai nĕñce-3

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1530. O heart, the younger brother of the white conch-colored BalaRāman, who ate the churned butter and swallowed all the three worlds stays in Thirunaraiyur where the juice of sweet jackfruit flows and banana trees ripen with abundant fruits in the flourishing groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுளை கொண்ட சுளைகளையுடைய; பலங்கனிகள் பலாப்பழங்களிலிருந்து; தேன்பாய தேன் வெள்ளம் பாய; கதலிகளின் திளை வாழை மரத்தின்; கொண்ட பழம் பருத்த பழங்கள்; கெழுமித் அடர்ந்திருக்கும்; திகழ் சோலை சோலைகளையுடைய; திருநறையூர் திருநறையூரிலிருக்கும் பெருமானை; வளை கொண்ட சங்குகளைப் போன்ற; வண்ணத்தன் வண்ணமுடைய; பின் பலராமனுக்கு தம்பியாக; தோன்றல் தோன்றிய கண்ணன்; மூவுலகோடு மூவுலகோடு கூட; அளை கடைந்த; வெண்ணெய் வெண்ணெய்; உண்டான் தன் உண்டவனின்; அடி இணையே அடி இணையே; அடை அடைவாய்; நெஞ்சே! நெஞ்சே!