PT 5.8.2

சாதி வேற்றுமை பாராட்டாதவன் அரங்கன்

1419 வாதமாமகன்மர்க்கடம்விலங்கு
மற்றோர்சாதியென்றொழிந்திலை * உகந்து
காதலாதரம்கடலினும்பெருகச் செய்
தகவினுக்குஇல்லைகைம்மாறென்று *
கோதில்வாய்மையினாயொடும் உடனே
உண்பன்நானென்றஓண்பொருள் * எனக்கும்
ஆதல்வேண்டுமென்றுஅடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!
PT.5.8.2
1419 vāta mā makaṉ markkaṭam vilaṅku *
maṟṟu or cāti ĕṉṟu ŏzhintilai * ukantu
kātal ātaram kaṭaliṉum pĕrukac *
cĕytakaviṉukku illai kaimmāṟu ** ĕṉṟu
kotu il vāymaiyiṉāyŏṭum uṭaṉe *
uṇpaṉ nāṉ ĕṉṟa ŏṇ pŏrul̤ * ĕṉakkum
ātal veṇṭum ĕṉṟu aṭi-iṇai aṭainteṉ *
-aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉe-2

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1419. You did not think Hanuman, the son of Vāyu, was born as a mere animal. You did not ignore him because he belonged to the clan of monkeys but you happily accepted him as a friend, and your kindness was immeasurable, larger than the ocean. You told him lovingly, “There is nothing that I can return for all the things that you have done for me. I will eat with you. ” Thinking that you would show the same kindness you showed to Hanuman to me, your faithful servant, I have come to you to worship your feet. You are the god of Thiruvarangam surrounded with beautiful groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்றோர் சாதி வேறு சாதியில்; என்று பிறந்தவன் என்று; விலங்கு விலங்கு சாதியில்; மர்க்கடம் பிறந்த குரங்கு; வாத மா மகன் வாயுவின் சிறந்த புத்ரன்; ஒழிந்திலை என்று கைவிடாமல்; உகந்து உகந்தும்; காதல் ஆதரம் காதலும் ஆதரவும்; கடலினும் கடலைக்காட்டிலும்; பெருக அதிகமாக பெருக; செய்தகவினுக்கு செய்த உமக்கு; கைம்மாறு என்று கைம்மாறு; இல்லை இல்லை என்றும்; கோது இல் குற்றமற்றவனாக இனிமையாக; வாய்மையினாயொடும் உண்மை பேசிய; உடனே உம்மோடு கூடியிருந்து; உண்பன் நான் உண்பேன் நான் என்று; என்ற அனுமனைக்குறித்து கூறிய; ஒண் பொருள் அழகிய அர்த்தமானது; எனக்கும் எனக்கும்; ஆதல் என் விஷயத்திலும்; வேண்டும் என்று உண்டாக வேண்டும் என்று கருதி; நின் அடியிணை உன் பாதங்களில்; அடைந்தேன் சரணமடைந்தேன்; அணி பொழில் அழகிய சோலைகள் சூழ்ந்த; திருவரங்கத்து திருவரங்கத்திலுள்ள; அம்மானே! பெருமானே!