PT 5.8.10

இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்தவிடும்

1427 மாடமாளிகைசூழ்திருமங்கை
மன்னன் ஒன்னலர்தங்களைவெல்லும் *
ஆடல்மாவலவன்கலிகன்றி
அணிபொழில்திருவரங்கத்தம்மானை *
நீடுதொல்புகழாழிவல்லானை
எந்தையைநெடுமாலைநினைந்த *
பாடல்பத்திவைபாடுமின்தொண்டீர்!
பாட நும்மிடைப்பாவம்நில்லாவே. (2)
PT.5.8.10
1427 ## மாட மாளிகை சூழ் திருமங்கை
மன்னன் * ஒன்னலர் தங்களை வெல்லும் *
ஆடல்மா வலவன் கலிகன்றி *
அணி பொழில் திருவரங்கத்து அம்மானை **
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை *
எந்தையை நெடுமாலை நினைந்த *
பாடல் பத்து இவை பாடுமின் தொண்டீர்
பாட * நும்மிடைப் பாவம் நில்லாவே 10
1427 ## māṭa māl̤ikai cūzh tirumaṅkai
-maṉṉaṉ * ŏṉṉalar-taṅkal̤ai vĕllum *
āṭalmā valavaṉ kalikaṉṟi *
aṇi pŏzhil tiruvaraṅkattu ammāṉai **
nīṭu tŏl pukazh āzhi vallāṉai *
ĕntaiyai nĕṭumālai niṉainta *
pāṭal pattu-ivai pāṭumiṉ tŏṇṭīr
pāṭa * nummiṭaip pāvam nillāve-10

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Divya Desam

Simple Translation

1427. Kaliyan, the conquerer of many enemies, the king of Thirumangai surrounded by palaces, composed ten pāsurams on the god of Thiruvarangam surrounded by beautiful groves. O devotees, worship the famous, ancient god, our father, Nedumal with a discus. If you learn and recite these ten pāsurams, your sins will go away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மாட மாளிகை மாட மாளிகைகளால்; சூழ் சூழ்ந்த; திருமங்கை திருமங்கை; மன்னன் மன்னன்; ஒன்னலர் தங்களை சத்ருக்களை; வெல்லும் வெல்லும்; ஆடல்மா ஆடல்மா என்ற குதிரையை; வலவன் நடத்த வல்லவரான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; அணி பொழில் அழகிய சோலைகளையுடைய; திருவரங்கத்து திருவரங்கத்து; அம்மானை பெருமானைக் குறித்து; நீடு தொல் புகழ் பெரும் கீர்த்தியையுடைய; ஆழி வல்லானை ஆழியை ஆளுபவனான; எந்தையை என் தந்தையை; நெடு மாலை எம்பெருமானை அனுபவித்து அதனால்; நினைந்த உண்டான; பாடல் பத்து இவை இப்பத்துப் பாசுரங்களை; பாடுமின் தொண்டீர்! அனுஸந்திக்கும் தொண்டர்களே!; பாட இவைப் பத்துப் பாசுரங்களைப்பாட; நும்மிடை உங்களிடத்தில்; பாவம் நில்லாவே பாவங்கள் நசிந்துவிடும்