PT 5.3.8

வேதங்களைத் தோற்றுவித்தவனே! அருள் காட்டு

1375 முன்னிவ்வேழுலகுஉணர்வின்றிஇருள்மிக உம்பர்கள் தொழுதேத்த *
அன்னமாகிஅன்றருமறைபயந்தவனே! எனக்குஅருள்புரியே *
மன்னுகேதகைசூதகம்என்றிவை வனத்திடைச் சுரும்பினங்கள் *
தென்னவென்னவண்டுஇன்னிசைமுரல் திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.8
1375 muṉ iv ezh ulaku uṇarvu iṉṟi * irul̤ mika
umparkal̤ tŏzhutu etta *
aṉṉam āki aṉṟu aru maṟai payantava
ṉe! * -ĕṉakku arul̤puriye ** -
maṉṉu ketakai cūtakam ĕṉṟu ivai *
vaṉattiṭaic curumpu iṉaṅkal̤ *
tĕṉṉa ĕṉṉa vaṇṭu iṉ icai mural * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-8

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1375. When the world grew dark and everyone became dull-witted, and the gods in the sky worshiped you asking you to give them knowledge, you took the form of a swan and taught them the Vedās. You stay in Thiruvellarai where surumbu bees and many kinds of other bees swarm around the blooming screw pine plants and mango trees singing beautifully with the sound “tena tena. ” Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு இடைவிடாமல்; கேதகை பூக்கும் தாழை மாமரம்; சூதகம் என்று இவை ஆகிய மரங்களையுடைய; வனத்திடை சோலைகளின் நடுவே; சுரும்பு சுரும்பு; இனங்கள் இன வண்டுகளின் கூட்டம்; தென்ன என்ன தென்ன தென்ன என்றுபாட; வண்டு இன்னிசை வண்டுகள் இன்னிசை; முரல் ரீங்காரம் பண்ணும்; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; முன் இவ் ஏழ் முன்பொரு சமயம் ஏழ்; உலகு உலகனைத்தும்; உணர்வு இன்றி உணர்வு இன்றி; இருள் மிக இருளில் ஆழ்ந்து கிடந்த போது; உம்பர்கள் தேவர்கள்; தொழுது ஏத்த வணங்கித் துதிக்க; அன்று அன்று; அன்னம் ஆகி அன்னம் ஆகி; அருமறை காணாமல்போன அருமையான வேதங்களை; பயந்தவனே! உண்டாக்கி தந்தவனே!; எனக்கு அருள்புரியே எனக்கு அருளபுரியவேணும்