PT 5.10.2

உலகேழும் உண்டவன் உறையும் ஊர்

1439 உய்யும்வகையுண்டுசொனசெய்யில்உலககேழும்ஒழியாமைமுனநாள் *
மெய்யினளவேஅமுதுசெய்யவல ஐயனவன்மேவுநகர்தான் *
மையவரிவண்டுமதுவுண்டுகிளையோடு மலர்கிண்டி, அதன்மேல் *
நைவளம்நவிற்றுபொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
PT.5.10.2
1439 uyyum vakai uṇṭu cŏṉa cĕyyil ulaku * ezhum ŏzhi
yāmai muṉa nāl̤ *
mĕyyiṉ al̤ave amutucĕyya vala * aiyaṉ-avaṉ
mevum nakar-tāṉ ** -
maiya vari vaṇṭu matu uṇṭu kil̤aiyoṭu * malar
kiṇṭi ataṉmel *
naival̤am naviṟṟu pŏzhil * nantipuraviṇṇakaram
-naṇṇu maṉame-2

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1439. O heart, there is a way you can be saved— this is what you must do. Think of Nandipuravinnagaram where the lord stays who swallowed the seven worlds at the end of the eon, where dark lined bees drink honey, play in the flowers with their swarm and sing Naivalam ragas in the groves.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனமே! மனமே!; சொன நான் சொல்வதை; செய்யில் செய்தால்; உய்யும் உய்வதற்கு; வகை உண்டு வழி உண்டு; உலகம் ஏழும் ஏழு உலகங்களையும்; ஒழியாமை ஒன்றுவிடாமல்; முனனாள் முன்பு பிரளய காலத்தில்; மெய்யின் தன் சரீரத்துக்குள்; அளவே அடங்கும்படி; அமுது செய்ய உண்டு காப்பதில்; வல வல்லவரான; ஐயன் அவன் அந்த பெருமான்; மேவும் நகர் தான் இருக்கும் நகர்; மைய வரி கரிய வரிகளையுடைய; வண்டு வண்டுகள்; மது உண்டு மது உண்டு; கிளையோடு தம் பரிவாரத்துடன்; மலர் கிண்டி பூக்களைக் கோதி; அதன்மேல் மேலும்; நைவளம் ரீங்கரித்துக்; நவிற்று கொண்டிருக்கும்; பொழில் சோலைகளையுடைய; நந்திபுரவிண்ணகரம் நந்திபுர விண்ணகரத்தை; நண்ணு மனமே! அடைந்திடுவாயாக