Chapter 5

Thirunāngur Thirumanikkudam - (தூம்பு உடைப்)

திருநாங்கூர்த் திருமணிக்கூடம்
Thirunāngur Thirumanikkudam - (தூம்பு உடைப்)
This village is one of the Thirunangur Divya Desams. It is located half a mile east of Thirunangur. The Lord here is Thirumanikkoodanayagan, and the Goddess is Indira Devi. This Lord is also known as Gajendra Varadhan.
இவ்வூர் திருநாங்கூர்த் திருப்பதிகளுள் ஒன்று. திருநாங்கூரிலிருந்து கிழக்கே அரைக்கல் தொலைவில் உள்ளது. பெருமாள் திருமணிக்கூட நாயகன். தாயார் இந்திரா தேவி. இந்த எம் பெருமான் கஜேந்திரவரதன்.
Verses: 1288 to 1297
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods
  • PT 4.5.1
    1288 ## தூம்பு உடைப் பனைக் கை வேழம் *
    துயர் கெடுத்தருளி * மன்னும்
    காம்பு உடைக் குன்றம் ஏந்திக் *
    கடு மழை காத்த எந்தை *
    பூம் புனல் பொன்னி முற்றும் **
    புகுந்து பொன் வரன்ட எங்கும் *
    தேம் பொழில் கமழும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 1
  • PT 4.5.2
    1289 கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் *
    கதிர் முலை சுவைத்து * இலங்கை
    வவ்விய இடும்பை தீரக் *
    கடுங் கணை துரந்த எந்தை **
    கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் *
    குங்குமம் கழுவிப் போந்த *
    தெய்வ நீர் கழும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 2
  • PT 4.5.3
    1290 மாத் தொழில் மடங்கச் செற்று *
    மருது இற நடந்து * வன் தாள்
    சேத் தொழில் சிதைத்துப் * பின்னை
    செவ்வித் தோள் புணர்ந்த எந்தை **
    நாத் தொழில் மறை வல்லார்கள் *
    நயந்து அறம் பயந்த வண் கைத் *
    தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 3
  • PT 4.5.4
    1291 தாங்கு அரும் சினத்து வன் தாள் *
    தடக் கை மா மருப்பு வாங்கி *
    பூங் குருந்து ஒசித்து புள் வாய்
    பிளந்து * எருது அடர்த்த எந்தை **
    மாங்கனி நுகர்ந்த மந்தி *
    வந்து வண்டு இரிய * வாழைத்
    தீங் கனி நுகரும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 4
  • PT 4.5.5
    1292 கரு மகள் இலங்கையாட்டி *
    பிலங் கொள் வாய் திறந்து * தன்மேல்
    வரும் அவள் செவியும் மூக்கும்
    வாளினால் தடிந்த எந்தை **
    பெரு மகள் பேதை மங்கை *
    தன்னொடும் பிரிவு இலாத *
    திருமகள் மருவும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 5
  • PT 4.5.6
    1293 கெண்டையும் குறளும் புள்ளும் * கேழலும் அரியும் மாவும் *
    அண்டமும் சுடரும் அல்லா * ஆற்றலும் ஆய எந்தை **
    ஒண் திறல் தென்னன் ஓட * வட அரசு ஓட்டம் கண்ட *
    திண் திறலாளர் நாங்கூர்த் * திருமணிக்கூடத்தானே 6
  • PT 4.5.7
    1294 குன்றமும் வானும் மண்ணும் *
    குளிர் புனல் திங்களோடு *
    நின்ற வெம் சுடரும் அல்லா *
    நிலைகளும் ஆய எந்தை **
    மன்றமும் வயலும் காவும் *
    மாடமும் மணங் கொண்டு * எங்கும்
    தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 7
  • PT 4.5.8
    1295 சங்கையும் துணிவும் பொய்யும் *
    மெய்யும் இத் தரணி ஓம்பும் *
    பொங்கிய முகிலும் அல்லாப் *
    பொருள்களும் ஆய எந்தை **
    பங்கயம் உகுத்த தேறல் *
    பருகிய வாளை பாய *
    செங் கயல் உகளும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 8
  • PT 4.5.9
    1296 பாவமும் அறமும் வீடும் *
    இன்பமும் துன்பம் தானும் *
    கோவமும் அருளும் அல்லாக் *
    குணங்களும் ஆய எந்தை **
    மூவரில் எங்கள் மூர்த்தி *
    இவன் என முனிவரோடு *
    தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானே 9
  • PT 4.5.10
    1297 ## திங்கள் தோய் மாட நாங்கூர்த் *
    திருமணிக்கூடத்தானை *
    மங்கையர் தலைவன் வண் தார்க் *
    கலியன் வாய் ஒலிகள் வல்லார் **
    பொங்கு நீர் உலகம் ஆண்டு *
    பொன் உலகு ஆண்டு * பின்னும்
    வெம் கதிர்ப் பரிதி வட்டத்து
    ஊடு போய் * விளங்குவாரே 10