They Shall Rule This World
இவ்வுலகை ஆள்வர்
1346 குடிகுடியாகக்கூடிநின்றுஅமரர்
குணங்களேபிதற்றிநின்றேத்த *
அடியவர்க்குஅருளிஅரவணைத்துயின்ற
ஆழியான்அமர்ந்துறைகோயில் *
கடியுடைக்கமலம் அடியிடைமலரக்
கரும்பொடுபெருஞ்செந்நெல்அசைய *
வடிவுடைஅன்னம் பெடையொடும்சேரும்
வயல்வெள்ளியங்குடியதுவே.