Chapter 10

Thiruvelliyangudi - (ஆய்ச்சியர் அழைப்ப)

திருவெள்ளியங்குடி
Thiruvelliyangudi - (ஆய்ச்சியர் அழைப்ப)

This village is located five miles from Anaikkarai on the Mayavaram-Kumbakonam route. The Lord of Thiruvazhundur appeared and granted darshan to the āzhvār, who was distressed due to being unable to have the Lord's darshan at Thiruvindalur.


In the preceding chapter, the Āzhvār expressed a profound sense of anguish, lamenting his inability to engage

+ Read more

இவ்வூர் மாயவரம்-கும்பகோணம் பிரிவில் அணைக்கரைக்கு ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவிந்தளூரில் பெருமாள் சேவை கிடைக்காமையால் வருந்திய ஆழ்வாரை இவ்வூர்ப் பெருமாள் அழைத்துத் தரிசனம் தந்தருளினார்.

Verses: 1338 to 1347
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 4.10.1
    1338 ## ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் *
    ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் *
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் *
    பெரு நிலம் அளந்தவன் கோயில் **
    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் *
    எங்கும் ஆம் பொழில்களின் நடுவே *
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் *
    திருவெள்ளியங்குடி அதுவே 1
  • PT 4.10.2
    1339 ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு *
    அரக்கர் தம் சிரங்களை உருட்டி *
    கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் *
    கண்ணனார் கருதிய கோயில் **
    பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி *
    பொதும்பிடை வரி வண்டு மிண்டி *
    தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 2
  • PT 4.10.3
    1340 கடு விடம் உடைய காளியன் தடத்தைக் *
    கலக்கி முன் அலக்கழித்து * அவன் தன்
    படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
    பல் நடம் பயின்றவன் கோயில் **
    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் *
    பயிற்றிய நாடகத்து ஒலி போய் *
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 3
  • PT 4.10.4
    1341 கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த *
    காளமேகத் திரு உருவன் *
    பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற *
    பரமனார் பள்ளிகொள் கோயில் **
    துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் *
    தொகு திரை மண்ணியின் தென்பால் *
    செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் *
    திருவெள்ளியங்குடி அதுவே 4
  • PT 4.10.5
    1342 பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து *
    பாரதம் கையெறிந்து * ஒருகால்
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த *
    செங் கண் மால் சென்று உறை கோயில் **
    ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி *
    எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி *
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற *
    திருவெள்ளியங்குடி அதுவே 5
  • PT 4.10.6
    1343 காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக் *
    கடல் அரக்கர் தம் சேனை *
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த *
    கோல வில் இராமன் தன் கோயில் **
    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் *
    ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி *
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் *
    திருவெள்ளியங்குடி அதுவே 6
  • PT 4.10.7
    1344 ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த *
    மாவலி வேள்வியில் புக்கு *
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு *
    திக்கு உற வளர்ந்தவன் கோயில் *
    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் *
    அரி அரி என்று அவை அழைப்ப *
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் *
    திருவெள்ளியங்குடி அதுவே 7
  • PT 4.10.8
    1345 முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் * அசுரர்
    தம் பெருமானை * அன்று அரி ஆய்
    மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட *
    மாயனார் மன்னிய கோயில் **
    படியிடை மாடத்து அடியிடைத் தூணில் *
    பதித்த பல் மணிகளின் ஒளியால் *
    விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய *
    திருவெள்ளியங்குடி அதுவே 8
  • PT 4.10.9
    1346 குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் *
    குணங்களே பிதற்றி நின்று ஏத்த *
    அடியவர்க்கு அருளி அரவு அணைத் துயின்ற *
    ஆழியான் அமர்ந்து உறை கோயில் **
    கடி உடைக் கமலம் அடியிடை மலரக் *
    கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய *
    வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் *
    வயல் வெள்ளியங்குடி அதுவே 9
  • PT 4.10.10
    1347 ## பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் *
    பார் இடந்து எயிற்றினில் கொண்டு *
    தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற *
    திருவெள்ளியங்குடியானை **
    வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் *
    மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
    கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
    ஆள்வர் இக் குரை கடல் உலகே 10