PT 4.1.7

நரசிங்கனின் இடமே திருத்தேவனார் தொகை

1254 ஓடாத வாளரியின் உருவாகிஇரணியனை *
வாடாதவள்ளுகிரால் பிளந்தளைந்தமாலதிடம் *
ஏடேறுபெருஞ்செல்வத்து எழில்மறையோர்நாங்கை தன்னுள் *
சேடேறுபொழில்தழுவு திருத்தேவனார்தொகையே.
PT.4.1.7
1254 oṭāta vāl̤ariyiṉ * uru āki iraṇiyaṉai *
vāṭāta val̤ ukirāl * pil̤antu al̤ainta mālatu iṭam *
eṭu eṟu pĕruñ cĕlvattu * ĕzhil maṟaiyor nāṅkai-taṉṉul̤ *
ceṭu eṟu pŏzhil tazhuvu * tiruttevaṉārtŏkaiye-7

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1254. Our Thirumāl who took the form of a shining lion that never retreats and went to Hiranyan and split open his chest with his sharp claws stays in beautiful Thiruthevanārthohai in Nāngai where flowers bloom in the groves and divine, famous Brahmins have an abundant wealth of knowledge of the sastras.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓடாத முதுகு காட்டி ஓடாத; ஆளரியின் அபூர்வமான நரஸிம்ம; உரு ஆகி மூர்த்தியாக அவதரித்து; வாடாத வள் வளையாத கூர்மையான; உகிரால் நகங்களினால்; இரணியனை பிளந்து இரணியனை பிளந்து; அளைந்த அளைந்த; மாலது இடம் எம்பெருமான் இருக்குமிடம்; ஏடு ஏறு ஏடுகளிலே பதிவு செய்யத் தக்க; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வச் செழிப்போடு; எழில் மறையோர் அழகிய வைதிகர்கள் வாழும்; நாங்கைதன்னுள் திருநாங்கூரில்; சேடு ஏறு பொழில் தழுவு இளஞ்சோலைகளோடு கூடிய; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
ŏdādha (new) not usually seen (in this world); āl̤ ariyin narasimha-s; uruvāgi assuming the form; vādādha not bending (remaining firm); val̤ sharp; ugirāl with the nails; iraṇiyanai hiraṇyāsuran; pil̤andhu tore; al̤aindha stirring (the limbs); māladhu sarvĕṣvaran who has great love towards his devotees, his; idam abode; ĕdu in the book; ĕṛu to be seen after writing; perum being incomprehensible; selvaththu having wealth; ezhil having beauty of revealing bhagavān-s svarūpam etc; maṛaiyŏr the eternal residence of ṣrīvaishṇavas who are experts in vĕdhams; nāngai than ul̤ in thirunāngūr; sĕdu youthfulness; ĕṛu growing; malar of the flowers; pozhil by gardens; sūzh surrounded; thiruththĕvanār thogai thiruththĕvanār thogai.