PT 2.7.4

பிரானே! உன்னை நினைந்து புலம்புகிறாள் என்மகள்

1111 ஊழியின்பெரிதால்நாழிகையென்னும்
ஒண்சுடர்துயின்றதால்லென்னும் *
ஆழியும்புலம்பும் அன்றிலும்உறங்கா
தென்றலும்தீயினிற்கொடிதாம் *
தோழியோ! என்னும்துணைமுலைஅரக்கும்
சொல்லுமின்என்செய்கேன்? என்னும் *
ஏழையென்பொன்னுக்கு என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே!
PT.2.7.4
1111 ūzhiyiṉ pĕritāl nāzhikai ĕṉṉum * ŏṇ cuṭar tuyiṉṟatāl ĕṉṉum *
āzhiyum pulampum aṉṟilum uṟaṅkā * tĕṉṟalum tīyiṉil kŏṭitu ām **
tozhi o ĕṉṉum tuṇai mulai arakkum * cŏllumiṉ ĕṉ cĕykeṉ? ĕṉṉum *
ezhai ĕṉ pŏṉṉukku ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe-4

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1111. Her mother says, “My poor daughter says that one nazihai is longer than an eon. She asks her friends, ‘When will this bright sun go to sleep? Why does the ocean grieve? Why doesn’t the glossy ibis bird sleep? The breeze is more cruel than fire for me. Both my breasts hurt. You are my friends. Tell me what I can say. ’ What do you think of my daughter as precious as gold, O father, lord of Thiruvidaventhai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாழிகை என்னும் ஒரு நாழிகைப் பொழுதானது; ஊழியில் ஒரு கல்பத்தைக் காட்டிலும்; பெரிதால் பெரியது என்கிறாள்; ஒண் சுடர் ஒளிமயமான சூரியன்; துயின்றதால் என்னும் அஸ்தமித்தான்; ஆழியும் புலம்பும் கடலும் கோஷிக்கிறது; அன்றிலும் அன்றில் பறவையோ; உறங்கா உறங்கவில்லை; தென்றலும் தென்றல் காற்றோ; தீயினில் நெருப்பைக் காட்டிலும்; கொடிது ஆம் கொதிக்கிறது; தோழி! ஓ! என்னும் தோழி! என் செய்வேன் என்கிறாள்; துணை முலை அரக்கும் மார்பகங்களால் துன்புறுகிறாள்; என் செய்கேன்? இப்படிப்பட்ட கஷ்டங்களுக்கு என்ன பரிஹாரம்?; சொல்லுமின் என் என்னும் என்று சொல்லுங்கள் என்கிறாள்; ஏழை அதி சபலையான; என் பொன்னுக்கு என் பெண் விஷ்யத்தில்; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; என் நினைந்து இருந்தாய்? என்ன செய்வதாக நினைக்கிறீர்?
nāzhigai nāzhigai duration (24 minutes); ūzhiyil more than a kalpa (one day of brahmā); peridhu stretching very much; ennum she told that;; oṇ having great radiance; sudar sun; thuyinṛadhu ennum she will tell that he has set;; āzhiyum ocean; pulambum is making noise;; anṛilum anṛil bird; uṛangā is not sleeping;; thenṛalum southerly breeśe; thīyinil more than fire; kodidhām is blowing in a cruel manner;; thŏzhī ŏh friend!; ŏh! ennum will call her saying -ŏh-;; thuṇai mulai two nipples; arakkum will control;; en seygĕn what shall ī do; sollumin ennum she will tell -tell me-;; ĕzhai very desirous; en one who is born to me; ponnukku in the matter of this best girl; en ninaindhirundhāy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirānĕ ŏh lord of my clan!; sollu ẏou should mercifully speak a word.