Chapter 6
Thirukkadalmallai 2 - (நண்ணாத வாள்)
The pinnacle of devotion to the Lord is devotion to His devotees. The āzhvār says that the devotees of Thalasayana Perumal as his leaders. Thirukkadalmallai is a place of great significance. The Lord of Thalasayana is highly exalted. The devotees who constantly think of Him are elevated by their devotion. They always worship the Lord. The āzhvār believes that being a servant to such devotees is the most fitting position for himself.
பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. தலசயனத்து உறைவாரை எண்ணும் பாகவதர்களே தமக்குத் தலைவர்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். கடல்மல்லை பெருமையுடையது. தலசயனத் தெம்பெருமான் மிகவும் பெருமை கொண்டவன். அவனையே நினைக்கும் அடியார்கள் பெருமையால் உயர்ந்தவர்கள். அவர்கள் எப்பொழுதும் பகவானையே வணங்குகிறவர்கள். அவர்களுக்கு அடியவராக இருப்பதே தமக்கு ஏற்றம் என்று எண்ணுகிறார் ஆழ்வார்.
Verses: 1098 to 1107
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will become the king of kings
- PT 2.6.1
1098 ## நண்ணாத வாள் அவுணர் * இடைப் புக்கு வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லைத் * தலசயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை * இறைப் பொழுதும் எண்ணோமே 1 - PT 2.6.2
1099 பார் வண்ண மட மங்கை * பனி நல் மா மலர்க் கிழத்தி
நீர் வண்ணன் மார்வத்தில் * இருக்கையை முன் நினைந்து அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் * கடல்மல்லைத் தலசயனம்
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் * அவர் எம்மை ஆள்வாரே 2 - PT 2.6.3
1100 ## ஏனத்தின் உருவு ஆகி * நில மங்கை எழில் கொண்டான்
வானத்தில் அவர் முறையால் * மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள **
கானத்தின் கடல்மல்லைத் * தலசயனத்து உறைகின்ற
ஞானத்தின் ஒளி உருவை * நினைவார் என் நாயகரே 3 - PT 2.6.4
1101 விண்டாரை வென்று ஆவி * விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் * அழல் ஏற வெம் சமத்துக்
கண்டாரை கடல்மல்லைத் * தலசயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சு உடையார் * அவர் எங்கள் குலதெய்வமே 4 - PT 2.6.5
1102 பிச்சச் சிறு பீலிச் * சமண் குண்டர் முதலாயோர்
விச்சைக்கு இறை என்னும் * அவ் இறையைப் பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் * கடல்மல்லைத் தலசயனம்
நச்சித் தொழுவாரை * நச்சு என் தன் நல் நெஞ்சே 5 - PT 2.6.6
1103 புலன் கொள் நிதிக் குவையோடு * புழைக் கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணிக் குவையும் * சுமந்து எங்கும் நான்று ஒசிந்து
கலங்கள் இயங்கும் மல்லைக் * கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள் மனத்தார் அவரை * வலங்கொள் என் மட நெஞ்சே 6 - PT 2.6.7
1104 பஞ்சிச் சிறு கூழை * உரு ஆகி மருவாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட * அண்ணல் முன் நண்ணாத
கஞ்சைக் கடந்தவன் ஊர் * கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் * தொழுவாய் என் தூய் நெஞ்சே 7 - PT 2.6.8
1105 செழு நீர் மலர்க் கமலம் * திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழப் * பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் * கடல்மல்லைத் தலசயனம்
தொழும் நீர் மனத்தவரைத் * தொழுவாய் என் தூய் நெஞ்சே 8 - PT 2.6.9
1106 பிணங்கள் இடு காடு அதனுள் * நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச் சக்கரத்து * எம் பெருமானார்க்கு இடம் விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக் * கடல்மல்லைத் தலசயனம்
வணங்கும் மனத்தார் அவரை * வணங்கு என் தன் மட நெஞ்சே 9 - PT 2.6.10
1107 ## கடி கமழும் நெடு மறுகின் * கடல்மல்லைத் தலசயனத்து
அடிகள் அடியே நினையும் * அடியவர்கள் தம் அடியான்
வடி கொள் நெடு வேல் வலவன் * கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர் தம் * முதல்வர் முதல் ஆவாரே 10