PT 2.5.7

நினைப்பவரின் உள்ளத்தில் நிலையாக வாழ்பவன்

1094 பேணாதவலியரக்கர் மெலியவன்று
பெருவரைத்தோளிறநெரித்து அன்ற அவுணர்கோனை *
பூணாகம்பிளவெடுத்த போர்வல்லோனைப்
பொருகடலுள்துயிலமர்ந்தபுள்ளூர்தியை *
ஊணாகப்பேய்முலைநஞ்சு உண்டான்தன்னை
உள்ளுவாருள்ளத்தேஉறைகின்றானை *
காணாதுதிரிதருவேன் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.7
1094 peṇāta vali arakkar mĕliya aṉṟu * pĕru varait tol̤ iṟa nĕrittu aṉṟu avuṇar-koṉai *
pūṇ ākam pil̤avu ĕṭutta por valloṉaip * pŏru kaṭalul̤ tuyil amarnta pul̤ ūrtiyai **
ūṇ ākap pey mulai nañcu uṇṭāṉ-taṉṉai * ul̤l̤uvār ul̤l̤atte uṟaikiṉṟāṉai *
kāṇātu tiritaruveṉ kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-7

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1094. The lord who rests on the roaring ocean and rides on Garudā crushed the mountain-like arms of the strong undefeated Rākshasas and killed their king of Lankā, Rāvana, took the form of a man-lion and split open the chest of the Asuran Hiranyan, and drank the poisonous milk of Putanā and killed her. He stays in Kadalmallai Thalasayanam surrounded with thick groves, and in the hearts of those who think of him and I searched for him and found him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொருசமயம்; பேணாத எம்பெருமானை மதியாத; வலி பலமுடைய; அரக்கர் அரக்கர்; மெலிய மெலியும்படி; பெரு பெரிய; வரை மலைபோன்ற; தோள் தோள்கள்; இறநெரித்து முறியும்படி அழித்தவனும்; அன்று பிரஹ்லாதன் துன்பப்பட்ட அன்று; அவுணர் அசுரர் தலைவனான; கோனை இரணியனுடைய; பூண் ஆகம் ஆபரணங்கள் அணிந்த மார்பை; பிளவு எடுத்த பிளந்தவனும்; போர் போர் புரிவதில்; வல்லோனை வல்லவனும்; பொரு அலைகளையுடைய; கடலுள் பாற் கடலில்; துயில் அமர்ந்த துயில் அமர்ந்தவனும்; புள் கருடனை; ஊர்தியை வாஹனமாக உடையவனும்; பேய் முலை பூதனையின் விஷம்; நஞ்சு தடவிய பாலை; ஊண் ஆக உணவாக; உண்டான் உண்டவனும்; உள்ளுவார் பக்தர்களின்; உள்ளத்தே உள்ளத்தில் என்றும்; உறைகின்றானை பொருந்தி இருக்கும் எம்பெருமானை; காணாது நெடுநாள் காணாது; திரிதருவேன் தேடித் திரிந்த நான்; கண்டு கொண்டேன் இன்று கண்டு கொண்டேன்; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல் மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
anṛu when rāvaṇa crossed his limits; pĕṇādha those did not respect ṣrī rāma to be sarvĕṣvaran; vali strong; arakkar rākshasas; peru huge; varai mountain like; thŏl̤ shoulders; iṛa to break; neriththu embraced; anṛu when his devotee prahlādha was harmed; avuṇar kŏnai the leader of demons, hiraṇya, his; pūṇ decorated with ornaments; āgam chest; pŏr in the battle; pil̤aveduththa one who split and threw; vallŏnai one who is capable; poru having rising waves; kadalul̤ in thiruppāṛkadal (milk ocean); thuyil amarndha being the one who mercifully rested; pul̤ ūrdhiyai being the one who rides garuda; pĕy mulai present in pūthanā-s bosom; nanju poison; ūṇāga as food which sustains him; uṇdān thannai being the one who mercifully consumed; ul̤l̤uvār those who become immersed in him by thinking about his killing of pūthanā; ul̤l̤aththu in the heart; uṛaiginṛānai one who remains firmly; kāṇādhu without seeing; thiridharuvĕn nān ī who searched; kadi fragrant; pozhil by garden; sūzh surrounded; thalasayanaththu in sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdu koṇdĕn ī got to see