PT 2.5.4

கண்ணபிரான் ஊர் கடல்மல்லை

1091 பேய்த்தாயைமுலையுண்ட பிள்ளைதன்னைப்
பிணைமருப்பிற்கருங்களிற்றை பிணைமான் நோக்கின் *
ஆய்த்தாயர்தயிர்வெண்ணெயமர்ந்தகோவை
அந்தணர்தம் அமுதத்தை, குரவைமுன்னே
கோத்தானை * குடமாடுகூத்தன்றன்னைக்
கோகுலங்கள்தளராமல்குன்றமேந்திக்
காத்தானை * எம்மானைக் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.4
1091 peyt tāyai mulai uṇṭa pil̤l̤ai- taṉṉaip * piṇai maruppiṉ karuṅ kal̤iṟṟai piṇai māṉ nokkiṉ *
āyt tāyar tayir vĕṇṇĕy amarnta kovai * antaṇar-tam amutattai kuravai muṉṉe
kottāṉai ** kuṭam āṭu kūttaṉ-taṉṉaik * kokulaṅkal̤ tal̤arāmal kuṉṟam entik
kāttāṉai * ĕmmāṉaik kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-4

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1091. In Kadalmallai Thalasayanam surrounded with thick groves I saw the god who drank milk from the breasts of Putanā and killed her, broke the tusks of the strong elephant Kuvalayābeedam and stole the butter that Yashodā, his doe-eyed mother, churned and kept in the uri. He, sweet nectar for Vediyars, danced the kuravai dance on a pot and carried Govardhanā mountain to protect the cows and the cowherds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாயை தாய் வடிவில் வந்த; பேய் பூதனையின்; முலை உண்ட விஷப்பாலை உண்ட; பிள்ளை தன்னை பாலகனை; பிணை பிணைந்த; மருப்பின் தந்தங்களையுடைய; கருங்களிற்றை கருத்த யானை போல்; பிணைமான் மான்விழியை; நோக்கின் ஒத்த விழியுடைய; ஆய்த் தாயர் யசோதையினுடைய; தயிர் தயிரும்; வெண்ணை வெண்ணெயும் உண்டு; அமர்ந்த அமர்ந்திருந்த; கோவை எம்பெருமானை; அந்தணர் தம் பக்தர்களுக்கு; அமுதத்தை அமுதம் போன்றவனும்; முன்னே முன்பு ஒரு சமயம்; குரவை பெண்களோடு; கோத்தானை ராஸக்ரிடை செய்தவனும்; குடமாடு குடக்கூத்து; கூத்தன் தன்னை ஆடினவனும்; கோகுலங்கள் பசுங்கூட்டங்கள்; தளராமல் வருந்தாதபடி; குன்றம் கோவர்த்தன மலையை; ஏந்தி குடையாக தூக்கி; காத்தானை காத்தவனான; எம்மானை எம்பெருமானை; கண்டு கொண்டேன் நான் கண்டது; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல்மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
thāy in the disguise of mother; pĕyai pūthanā-s; mulai bosom; uṇda mercifully consumed; pil̤l̤ai thannai being a child; piṇai joined to each other; maruppil tusk-s; karu dark; kal̤iṝai one who is similar to an elephant; mān piṇai like a doe; nŏkkil having eyes; āyththāyar yaṣŏdha, the cowherd mother, her; thayir curd; veṇṇey mercifully consuming the butter; amarndha sustained himself; kŏvai being the controller; andhaṇar tham for brāhmaṇas; amudhaththai one who is enjoyable like nectar; munnĕ previously; kuravai kŏththānai one who held the hands of the girls and played with them (further); kudam ādu one who danced with pots; kūththan thannai having grand activities (when indhra rained due to anger of hunger); kŏkulangal̤ herds of cows; thal̤arāmal to not suffer; kunṛam gŏvardhana hill; ĕndhi held; kāththānai one who protected; emmānai sarvĕṣvaran who enslaved us; kadi fragrant; pozhil by garden; sūzh surrounded; thalasayanaththu in sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdadhu ī got to see