PT 2.4.10

பக்தியுள்ள அரசராகிப் பரமனடி சேர்வர்

1087 நெடுமாலவன்மேவியநீர்மலைமேல்
நிலவும்புகழ்மங்கையர்கோன் * அமரில்
கடமாகளியானைவல்லான்கலிய
னொலிசெய் தமிழ்மாலைவல்லார்க்கு * உடனே
விடுமால்வினை வேண்டிடில்மேலுலகும்
எளிதாயிடும், அன்றிஇலங்கொலிசேர் *
கொடுமாகடல்வையகம்ஆண்டு மதிக்
குடைமன்னவராய்அடிகூடுவரே. (2)
PT.2.4.10
1087 ## nĕṭumāl-avaṉ meviya nīrmalaimel * nilavum pukazh maṅkaiyar-koṉ * amaril
kaṭa mā kal̤i yāṉai vallāṉ * kaliyaṉ ŏli cĕy tamizh mālai vallārkku ** uṭaṉe
viṭum māl viṉai veṇṭiṭil * mel ulakum ĕl̤itu āyiṭum aṉṟi ilaṅku ŏli cer *
kŏṭu mā kaṭal vaiyakam āṇṭu * matikkuṭai maṉṉavar āy aṭi kūṭuvare-10

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1087. Kaliyan, the famous chief of Thirumangai who fights with strong elephants in battle, composed ten Tamil pāsurams on the god of Thiruneermalai. If devotees worship him and pray to him to remove their karmā, it will be removed and they will rule the shining world surrounded with large oceans under a royal umbrella and reach the spiritual world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீர்மலை திருநீர்மலையில்; மேவிய இருக்கும்; நெடுமால் பெருமானைக்; அவன் மேல் குறித்து; நிலவும் நிலையான; புகழ் புகழையுடைய; மங்கையர் கோன் திருமங்கைத் தலைவரும்; அமரில் போரில் மத ஜலத்தோடு கூடின; கடமா களி மிகவும் களித்த; யானை யானையை; வல்லான் அடக்கவல்லவருமான; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலி செய் அருளிச்செய்த; தமிழ் மாலை இந்த தமிழ் பாசுரங்களை; வல்லார்க்கு அனுஸந்திப்பவர்களுக்கு; மால் வினை கர்ம வினை; உடனே விடும் உடனே நீங்கிவிடும்; வேண்டிடில் விரும்பினால் ஸ்வர்க்கம் போன்ற; மேல் உலகும் மேல் உலகங்களின் அனுபவமும்; எளிது ஆயிடும் சுலபமாகும்; அன்றி அதுவுமல்லாமல்; இலங்கு விளங்கும்; ஒலி சேர் ஒலியையுடைய; கொடு வளைந்த; மா கடல் பெரிய கடலால் சூழ்ந்த; வையகம் பூமியை; மதி சந்திரனை யொத்த; குடை வெண் கொற்றக்குடையையுடைய; மன்னவர் மன்னவர்களாய்; ஆய் ஆண்டு அரசாண்டு பின்பு; அடி அவன் திருவடிகளை; கூடுவரே அடைவார்கள்
nīrmalai in thirunīrmalai; mĕviya remaining firm; nedumālavan mĕl on sarvĕṣvaran; nilavum eternal; pugazh having fame; mangaiyar kŏn being the leader of thirumangai region; amaril in battle; kadam intoxication; very; kal̤i joyful; yānai elephant; vallān one who can conduct; kaliyan āzhvār; oli sey mercifully spoke with tune; thamizh mālai this garland of thamizh pāsurams; vallārkku for those who can practice; māl great; vinai karmas; udanĕ immediately; vidum will run away;; vĕṇdidil if desired; mĕl ulagum higher worlds such as heaven; el̤idhāyidum will be easily attainable;; anṛi otherwise; ilangu shining; oli sĕr having sound; kodu curved; vast; kadal surrounded by ocean; vaiyagam earth; madhikkudai under the white umbrella matching the moon; mannavarāy as kings; āṇdu ruling over (further); adi his divine feet; kūduvar will reach.