PT 10.1.5

திருநறையூரும் திருமெய்யமும்

1852 சுடலையில் சுடுநீறனமர்ந்தது * ஓர்
நடலைதீர்த்தவனை நறையூர்க்கண்டு * என்
உடலையுள்புகுந்துஉள்ளமுருக்கியுண் *
விடலையைச்சென்றுகாண்டும் மெய்யத்துள்ளே.
1852 cuṭalaiyil * cuṭu nīṟaṉ amarntatu or *
naṭalai tīrttavaṉai * naṟaiyūrk kaṇṭu ** ĕṉ
uṭalaiyul̤ pukuntu * ul̤l̤am urukki uṇ *
viṭalaiyaic cĕṉṟu kāṇṭum- * mĕyyattul̤l̤e-5

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1852. I saw the god of Thirunaraiyur. who removed the curse of Shivā who wears vibhuti and dances in the burning ground. He entered my heart and made it melt. I will go to Thirumeyyam and see him, strong as a bull.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுடலையில் ஸ்மசான பூமியில்; சுடு நீறன் சுட்ட சாம்பலைப் பூசிய ருத்ரன்; அமர்ந்தது அனுபவித்த; ஓர் நடலை ஒரு கஷ்டத்தை; தீர்த்தவனை தீர்த்தவனான பெருமானை; நறையூர் திருநறையூரில்; கண்டு கண்டு வணங்கினோம்; என் உடலையுள் என் உடலுக்குள்; புகுந்து புகுந்து; உள்ளம் உருக்கி என் நெஞ்சை உருக்கி; உண் உண்ணும்; விடலையை சிறுவனான; சென்று பெருமானை; மெய்யத்துள்ளே திருமெய்யத்தில்; காண்டும் சென்றும் வணங்குவோம்