PT 1.7.9

மனமே! சிங்கவேளைத் தொழு

1016 நல்லைநெஞ்சே! நாம்தொழுதும் நம்முடைநம்பெருமான் *
அல்லிமாதர்புல்கநின்ற ஆயிரந்தோளனிடம் *
நெல்லிமல்கிக்கல்லுடைப்பப் புல்லிலையார்த்து * அதர்வாய்ச்
சில்லுசில்லென்றொல்லறாத சிங்கவேள்குன்றமே.
PT.1.7.9
1016 nallai nĕñce nām tŏzhutum * nammuṭai nam pĕrumāṉ *
allimātar pulka niṉṟa * āyiran tol̤aṉ iṭam **
nĕlli malkik kal uṭaippap * pul ilai ārttu * atarvāyc
cilli cil ĕṉṟu ŏl aṟāta * ciṅkavel̤kuṉṟame-9

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1016. Our Lord Narasimha, who holds Mahālakṣmī close to His chest and shines with a thousand shoulders, lives here. Gooseberry trees thrive, rocks split from growing roots, palm leaves rustle loud in the wind, and birds cry "sil" without pause. This is Singaveḷkuṉṟam. O good heart, let us go and worship Him there!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்முடைய நம்முடைய; நம்பெருமான் நம்பெருமான் நரஸிம்மன்; அல்லிமாதர் மஹாலக்ஷ்மியை; புல்க நின்ற தழுவிக்கொண்டு; ஆயிரம் தோளன் ஆயிரம் தோளுடையவன்; இடம் இருக்குமிடமான; நெல்லி மல்கி நெல்லி மரங்கள் நிறைந்து; கல் கற்களினுள்ளே வேர்களின் அழுத்தத்தினால்; உடைப்ப பாறைகளை உடைக்கவும்; புல் இலை பனையோலைகள்; ஆர்த்து ஒலிசெய்யவும்; அதர்வாய் வழிகளிலே; சில்லி சுவர்க்கோழிகளுடைய; சில் என்று சில் என்கிற; ஒல் ஒலி இடைவிடாமல்; அறாத ஒலிக்கவும் பெற்ற இடம்; சிங்கவேள்குன்றமே சிங்க வேள்குன்றம்; நல்லை நெஞ்சே! ஓ மனமே!; நாம் தொழுதும் நாம் தொழுது வாழ்வோம்
nammudai being our refuge; namperumān being our lord; alli mādhar periya pirāttiyār who has lotus flower as her residence; pulgu to embrace; ninṛa one who mercifully resides; āyiram thŏl̤an sarvĕṣvaran who is having thousand divine shoulders, his; idam abode is; nelli gooseberry trees; malgi filled; kal rocks; udaippa to break; pul ilai palm leaf; ārththu to make noise; adharvāy in the path; silli birds named -silveedu-; sil enṛu ol aṛādha to not let up on making noise which sounds in the tone -sil-; singavĕl̤ kunṛam singavĕl̤ kunṛam ;; nallai nenjĕ ŏh mind who is agreeing with me!; nām thozhudhum We will (go there) and be uplifted by worshiping him