PT 1.7.5

எளிதில் சென்று ஸேவிக்கமுடியாத இடம்

1012 மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்கோளரியாய் * அவுணன்
பொன்றஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய *
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே.
PT.1.7.5
1012 mĕṉṟa pezhvāy * vāl̤ ĕyiṟṟu or kol̤ari āy * avuṇaṉ
pŏṉṟa ākam val̤ ukirāl * pozhnta puṉitaṉ iṭam **
niṉṟa cĕntī mŏṇṭu cūṟai * nīl̤ vicumpūṭu iriya *
cĕṉṟu kāṇṭaṟku-ariya koyil * ciṅkavel̤kuṉṟame-5

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1012. With wide mouth and sword-like teeth, He stood as the mighty Narasimha. At the mere sight of Him, Hiranyan fell, and the Lord, with His sharp claws, tore apart Hiranyan's body. Now He resides where fire blazes red, and fierce winds swirl through the sky. It is not easy to approach or see, such is the temple of Singaveḷkuṉṟam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மென்ற பேழ்வாய் பெரிய வாயும்; வாள் எயிற்று வாள்போன்ற பற்களும் உடைய; ஓர் கோள் ஒப்பற்ற மிடுக்கையுடைய; அரி ஆய் நரசிம்மனைப் பார்த்து; அவுணன் பொன்ற பயந்த இரணியனுடைய; ஆகம் உடலை; வள் உகிரால் கூர்மையான நகங்களாலே; போழ்ந்த பிளந்திட்ட; புனிதன் இடம் எம்பெருமான் இருக்குமிடம்; நின்ற செந்தீ சிவந்த நெருப்பை; மொண்டு வாரிக்கொண்டு; சூறை சுழல்காற்றானது; நீள் விசும்பூடு ஆகாசத்தில்; இரிய ஓடிப்பரவுகிறபடியாலே; சென்று காண்டற்கு சென்று ஸேவிக்க; அரிய கோயில் அரிய கோயில்; சிங்கவேள்குன்றமே அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றம்
menṛa (due to anger) chewing; pĕzh vāy huge mouth; vāl̤ sword like; eyiṛu teeth; kŏl̤ strong; ŏr ariyāy as matchless narasimha; ponṛa became destroyed (just on seeing that form); avuṇan hiraṇya, the demon, his; āgam body; val̤ ugirāl with sharp, divine nail; pŏzhndha split into two parts; punidhan sarvĕṣvaran who has pure mind, where he is residing; idam abode; ninṛa without any shortcoming; sem thī reddish fire; sūṛai tornado; moṇdu scooping it; nīl̤ visumbu ūdu in the vast sky; iriya since it is moving in a scattered manner; senṛu going to its vicinity; kāṇdaṛku to see; ariya difficult for everyone; kŏyil divine abode; singavĕl̤ kunṛamĕ singavĕl̤ kunṛam