PT 1.4.10

இவற்றைப் படித்தோர் அரசாள்வர்

987 வருந்திரைமணிநீர்க்கங்கையின் கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானை *
கருங்கடல்முந்நீர்வண்ணனை எண்ணிக்
கலியன்வாயொலி செய்தபனுவல் *
வரஞ்செய்தவைந்துமைந்தும் வல்லார்கள்
வானவருலகுடன்மருவி *
இருங்கடலுலகம்ஆண்டு வெண்குடைக்கீழ்
இமையவராகுவர்தாமே. (2)
PT.1.4.10
987 ## varum tirai maṇi nīrk kaṅkaiyiṉ karaimel * vatari ācciramattu ul̤l̤āṉai *
karuṅ kaṭal munnīr vaṇṇaṉai ĕṇṇik * kaliyaṉ vāy ŏlicĕyta paṉuval **
varamcĕyta aintum aintum vallārkal̤ * vāṉavar ulaku uṭaṉ maruvi *
iruṅ kaṭal ulakam āṇṭu vĕṇ kuṭaik kīzh * imaiyavar ākuvar tāme-10 **

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

987. On the banks of Ganga, whose gem-like waters rush with waves, in sacred Badarikāśramam, our Lord dwells. He, the Ocean-hued One, encompasses the threefold waters: river, rain, and spring. Meditate on Him! These ten verses were sung by Kaliyan with heartfelt praise, rich in meaning and resounding with devotion. Those who master and recite them shall live under a white umbrella, ruling the wide earth, and then ascend to SriVaikuntam, to join the Nityasuris.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வரும் மிகுந்த வேகத்தோடு வருகிற; திரை அலைகளோடு கூடின; மணி நீர் தெளிந்த ஜலத்தையுடைய; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து வதரி ஆச்சிரமத்தில்; உள்ளானை இருப்பவனைக் குறித்து; கருங் கடல் கறுத்த கடல் போன்ற; முந் மூன்று வகைப்பட்ட; நீர் ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர் ஆகிய; வண்ணனை கடல் போன்ற நிறமுடையவனை; எண்ணி நினைத்து; கலியன் வாய் திருமங்கையாழ்வார்; ஒலி செய்த பனுவல அருளிச்செய்த பாசுரங்களை; வரம் செய்த சிறந்த; ஐந்தும் ஐந்தும் இப்பத்துப்பாசுரங்களையும்; வல்லார்கள் ஓதவல்லவர்கள்; வெண் குடை வெண் கொற்றக் குடையின்; கீழ் கீழ் வாழ்ந்து; இருங் கடல் பெரிய கடல்சூழ்ந்த; உலகம் ஆண்டு பூமியை ஆண்டபின்; வானவர் உலகு மருவி தேவ லோகம் அடைந்து; உடன் அடுத்தபடியாக; இமையவர் ஆகுவர் தாமே நித்யசூரியrகளுடன் கூடுவர்
varum coming with great speed; thirai having waves; maṇi clear; nīr having water; gangaiyin karai mĕl present on the banks of gangā; vadhari āchchirāmaththu in ṣrī badharīkāṣramam; ul̤l̤ānai one who is eternally residing; karu being dark; munnīr having three types of water; kadal vaṇṇanai sarvĕṣvaran, who is having the divine complexion of ocean; eṇṇi meditating upon; kaliyan āzhvār; vāy mercifully spoke with his divine words; oli seydha in the form of a garland of words; panuval being the songs; varam seydha compiled with the mercy of bhagavān; aindhum aindhum these ten pāsurams; vallārgal̤ those who are able to recite along with their meanings; iru vast; kadal surrounded by ocean; ulagam this earth; vel̤ whitish; kudaik kīzh remaining on the shades of umbrella; āṇdu ruling over with a sceptre (further); vānavar brahmā who is the leader of dhĕvathās starting with indhra, his; ulagu udan sathya lŏkam; maruvi reaching (and enjoying there); imaiyavar āguvar will become a part of nithyasūris