PT 1.2.4

நெஞ்சே ! திருப்பிருதி அடை

961 மறங்கொளாளரியுருவெனவெருவர *
ஒருவனது அகல்மார்வம்
திறந்து * வானவர்மணிமுடிபணிதர *
இருந்தநல்லிமயத்துள் **
இறங்கி ஏனங்கள் வளைமருப்பிடந்திடக் *
கிடந்தருகெரிவீசும் *
பிறங்குமாமணியருவியொடிழிதரு *
பிரிதிசென்றடைனெஞ்சே
PT.1.2.4
961 maṟam kŏl̤ āl̤ ari uru ĕṉa vĕruvara * ŏruvaṉatu akal mārvam
tiṟantu * vāṉavar maṇi muṭi paṇitara * irunta nal imayattul̤ **
iṟaṅki eṉaṅkal̤ val̤ai maruppu iṭantiṭak * kiṭantu aruku ĕri vīcum *
piṟaṅku mā maṇi aruviyŏṭu izhitaru * piriti cĕṉṟu aṭai nĕñce! (4)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

961. When Sriman Narayana took the form of an angry man-lion Even the brave shuddered with fear. He tore open the vast chest of Hiraṇya, Making the gods bow down, With their gem-studded crowns touching the ground. That Sriman Narayana now resides in the sacred Himalayas, Where wild boars dig through rocks, Cracking them with their curved tusks, While radiant gemstones and glowing waterfalls Tumble down the slopes. Go, O heart, and reach Thiruppirithi!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓமனமே!; மறம் கொள் கோபம் கொண்ட’; ஆள் அரி நரசிம்ம மூர்த்தியின்; உரு என உருவத்தைச் சொல்லவே; வெருவர அஞ்சி நடுங்கும்படியாக; ஒருவனது இரணியனுடைய; அகல் மார்வம் விசாலமான மார்பை; திறந்து பிளந்து; வானவர் தேவர்கள்; மணி முடி மணிமயமான கிரிடங்களணிந்த; பணிதர தலையாலே வணங்கும்படியாக; இருந்த என்பெருமான் இருந்த; நல் இமயத்துள் இமயமலையில்; ஏனங்கள் பன்றிகளானவை; இறங்கி தலை குனிந்து; வளை வளைந்த; மருப்பு கொம்புகளாலே; இடந்திட பாறைகளை பிளக்க; அருகு கிடந்து அருகிலிருந்த; எரி வீசும் ஒளி வீசுகின்ற ப்ரகாசமான; பிறங்கு மா மணி சிறந்த மணிகளானவை; அருவியொடு மலையருவிகளோடு உருண்டு; இழிதரு விழுகிற இடமான; பிரிதி சென்று அடை திருப்பிரிதியை சென்று வணங்குக
maṛam ānger; kol̤ assumed; āl̤ ari narasimha-s; uru ena as said as the form; veruvara to fear; oruvanadhu the incomparable hiraṇya, his; agal wide; mārvam chest; thiṛandhu split open; vānavar dhĕvathās-; maṇi filled with gems; mudi crowns; paṇi thara to bow (at his divine feet); irundha the abode where the eternal sarvĕṣvaran is residing; nal good; imayaththul̤ in himavān; ĕnangal̤ pigs; iṛangi lean down; val̤ai bent; maruppu with the horns; idandhida as they break (the gem rocks apart) and push them down; arugu in close proximity; kidandhu remain; eri vīsum shining; big; piṛangu shining; maṇi gems; aruviyodu with the floods caused by rain; izhi tharu rolling down; piridhi in thiruppiridhi; senṛu go; nenjĕ ŏh mind!; adai try to reach.