Chapter 4

Wanting to become something on the hills of Thiruvengadam - (ஊன் ஏறு)

திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல்
Wanting to become something on the hills of Thiruvengadam - (ஊன் ஏறு)

The One who reclines in Thiruvarangam stands on the Thiruvenkatam hill. Shouldn't a person born as a human seek the connection with Thiruvenkatam? The cool, flowing streams of Venkata Hill are where the Lord delights in residing! Won't I be born as a stork living by the lake on that hill? Won't I be a fish living in the holy pond of Thiruvenkatam? Can't

+ Read more

திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே திருவேங்கடமலையில் நிற்கிறான். மனிதனாகப் பிறந்தவன் திருவேங்கடமலையின் சம்பந்தத்தைப் பெறவேண்டாமா? திருவேங்கடவன் விரும்பிவாழும் மலையன்றோ குளிரருவி வேங்கடம்! அம்மலையில் ஏரிக்கரையில் வாழும் நாரையாய்ப் பிறக்கமாட்டேனா! திருவேங்கடச் சுனையில் வாழும் மீனாக

+ Read more
Verses: 677 to 687
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will become devotees of the Lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 4.1

677 ஊனேறுசெல்வத்து உடற்பிறவியான்வேண்டேன் *
ஆனேறேழ்வென்றான் அடிமைத்திறமல்லால் *
கூனேறுசங்கமிடத்தான்தன் வேங்கடத்து *
கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே. (2)
677 ## ஊன் ஏறு செல்வத்து * உடற்பிறவி யான் வேண்டேன் *
ஆனேறு ஏழ் வென்றான் * அடிமைத் திறம் அல்லால் **
கூன் ஏறு சங்கம் இடத்தான் * தன் வேங்கடத்து *
கோனேரி வாழும் * குருகாய்ப் பிறப்பேனே (1)
677 ## ūṉ eṟu cĕlvattu * uṭaṟpiṟavi yāṉ veṇṭeṉ *
āṉeṟu ezh vĕṉṟāṉ * aṭimait tiṟam allāl **
kūṉ eṟu caṅkam iṭattāṉ * taṉ veṅkaṭattu *
koṉeri vāzhum * kurukāyp piṟappeṉe (1)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

677. I do not want this body that is a bundle of flesh and material pleasure . I want only to be the slave of the one who conquered seven strong bulls, the One who holds the conch in His left hand, I want to be born as a crane that lives in the pond Koneri, in Thiruvenkatam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஆனேறு ஏழ் ஏழு எருதுகளை; வென்றான் ஜயித்தவனுக்கு; அடிமைத் திறம் கைங்கரியம் செய்வதையே; அல்லால் நான் வேண்டுவதால்; ஊன் ஏறு உடல் பருத்து; செல்வத்து செல்வ செழிப்புடன்; உடற்பிறவி வாழும் மானிடப் பிறவியை; யான் வேண்டேன் நான் விரும்பமாட்டேன்; கூன் ஏறு சங்கம் வளைந்த சங்கை; இடத்தான் இடது கையிலே; தன் ஏந்தியவன் இருக்கும்; வேங்கடத்து வேங்கட மலையில்; கோனேரி கோனேரி என்னும் ஏரியில்; வாழும் வாழும்; குருகாய்ப் நாரையாக; பிறப்பேனே பிறந்திட விரும்புவேன்
allāl since I pray; aṭimait tiṟam to be in service; vĕṉṟāṉ to the Lord who conquered; āṉeṟu eḻ seven bulls; yāṉ veṇṭeṉ I will not like; uṭaṟpiṟavi the life of humans; cĕlvattu who live lavishly; ūṉ eṟu with obese body; piṟappeṉe i would wish to be born; kurukāyp as a swan; vāḻum that lives in; koṉeri a lake called Koneri; veṅkaṭattu on the Venkata hills where lives the Lord; taṉ who holds; kūṉ eṟu caṅkam the curved conch; iṭattāṉ on the left hand

PMT 4.2

678 ஆனாதசெல்வத்து அரம்பையர்கள்தற்சூழ *
வானாளும்செல்வமும் மண்ணரசும்யான்வேண்டேன் *
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில் *
மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே.
678 ஆனாத செல்வத்து * அரம்பையர்கள் தன் சூழ *
வான் ஆளும் செல்வமும் * மண் அரசும் யான் வேண்டேன் **
தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கடச் சுனையில் *
மீனாய்ப் பிறக்கும் * விதி உடையேன் ஆவேனே (2)
678 āṉāta cĕlvattu * arampaiyarkal̤ taன் cūzha *
vāṉ āl̤um cĕlvamum * maṇ aracum yāṉ veṇṭeṉ **
teṉ ār pūñcolait * tiruveṅkaṭac cuṉaiyil *
mīṉāyp piṟakkum * viti uṭaiyeṉ āveṉe (2)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

678. I do not want endless wealth or status, I don’t want to be surrounded by heavenly women or have the joy of ruling the sky and a kingdom on the earth. Oh! let me be born as a fish in a spring in Thiruvenkatam, filled with groves flourishing with flowers that drip honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஆனாத அழியாத; செல்வத்து இளமைச் செல்வத்தையுடைய; அரம்பையர்கள் ரம்பை போன்றோர்; தற் சூழ தன்னைச் சூழந்திருக்க; வானாளும் வானுலகத்தை ஆளுகின்ற; செல்வமும் செல்வமும்; மண் அரசும் பூவுலக அரசு பதவியும்; யான் வேண்டேன் நான் விரும்ப மாட்டேன்; தேன் ஆர் பூஞ் தேன் மிக்க மலர்களாலான; சோலை சோலை இருக்கும்; திருவேங்கடச் வேங்கட மலையின்; சுனையில் சுனையிலே; மீனாய்ப் பிறக்கும் மீனாகவாவது பிறக்கும்; விதியுடையேன் பாக்கியத்தை; ஆவேனே பெறக் கடவேன்
yāṉ veṇṭeṉ I will not desire; āṉāta for undying; cĕlvattu youthful eternal beauty and wealth; cĕlvamum wealth; vāṉāl̤um that rules the heavenly realm; taṟ cūḻa surrounding oneself; arampaiyarkal̤ with women like Rambha; maṇ aracum and even kingship over the earth; āveṉe I wish; vitiyuṭaiyeṉ the fortune to; mīṉāyp piṟakkum be born atleast as a fish; cuṉaiyil in the springs of; tiruveṅkaṭac Venkata hills; colai where groves exist; teṉ ār pūñ with honey-laden flowers

PMT 4.3

679 பின்னிட்டசடையானும் பிரமனும்இந்திரனும் *
துன்னிட்டுப்புகலரிய வைகுந்தநீள்வாசல் *
மின்வட்டச்சுடராழி வேங்கடக்கோன்தானுமிழும் *
பொன்வட்டில்பிடித்து உடனேபுகப்பெறுவேனாவேனே.
679 பின் இட்ட சடையானும் * பிரமனும் இந்திரனும் *
துன்னிட்டுப் புகல் அரிய * வைகுந்த நீள் வாசல் **
மின் வட்டச் சுடர் ஆழி * வேங்கடக்கோன் தான் உமிழும் *
பொன் வட்டில் பிடித்து உடனே * புகப்பெறுவேன் ஆவேனே (3)
679 piṉ iṭṭa caṭaiyāṉum * piramaṉum intiraṉum *
tuṉṉiṭṭup pukal ariya * vaikunta nīl̤ vācal **
miṉ vaṭṭac cuṭar āzhi * veṅkaṭakkoṉ tāṉ umizhum *
pŏṉ vaṭṭil piṭittu uṭaṉe * pukappĕṟuveṉ āveṉe (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

679. Shivā with matted hair, Nānmuhan and Indra throng before the divine entrance of Thirumalai that is similar to Vaikuntam which is not easily approachable. I will hold the golden plate of the lord of Thiruvenkatam who holds the fiery discus(chakra) in His hands and I will be blessed to enter.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பின்னிட்ட பின்னப்பட்ட; சடையானும் சடையுடைய சிவனும்; பிரமனும் பிரம்மாவும்; இந்திரனும் தேவேந்திரனும்; துன்னிட்டு நெருக்கிக் கொண்டும்; புகல் அரிய புகல்வதற்கு அரிதான; வைகுந்த வைகுந்த திருமலையின்; நீள்வாசல் நீண்ட வாசலிலே; மின்வட்ட மின்னல் வளையம் போன்ற; சுடர் சோதியாயிருக்கும் ஒளியுள்ள; ஆழி சக்ராயுதத்தையுடைய; வேங்கடக்கோன் தான் திருவேங்கடமுடையான்; உமிழும் நீரை உமிழும்; பொன்வட்டில் தங்க வட்டிலை; பிடித்து கையிலேந்திக் கொண்டு; உடனே விரைவில்; புகப்பெறுவேன் புகும் பாக்கியத்தை; ஆவேனே பெறுவேனாவேன்
caṭaiyāṉum Shiva with matted locks that are; piṉṉiṭṭa entwined; piramaṉum Brahma; intiraṉum and Indra; tuṉṉiṭṭu gather and throng; pukal ariya but cannot easily enter; vaikunta the Vaikuntha Tirumalai; veṅkaṭakkoṉ tāṉ Lord Ventakeshwara; āḻi with discus in His hand; cuṭar that is radiant; miṉvaṭṭa like lightening; nīl̤vācal in the long gateway of Tirumala; āveṉe will I attain; pukappĕṟuveṉ the forture to enter; uṭaṉe soon; piṭittu carrying in my hand; pŏṉvaṭṭil the golden vessel; umiḻum used for Lord's gargle

PMT 4.4

680 ஒண்பவளவேலையுலவு தண்பாற்கடலுள் *
கண்துயிலும்மாயோன் கழலிணைகள்காண்பதற்கு *
பண்பகரும்வண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்து *
செண்பகமாய்நிற்கும் திருவுடையேனாவேனே.
680 ஒண் பவள வேலை * உலவு தன் பாற்கடலுள் *
கண் துயிலும் மாயோன் * கழலிணைகள் காண்பதற்கு **
பண் பகரும் வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்து *
செண்பகமாய் நிற்கும் * திரு உடையேன் ஆவேனே (4)
680 ŏṇ paval̤a velai * ulavu taṉ pāṟkaṭalul̤ *
kaṇ tuyilum māyoṉ * kazhaliṇaikal̤ kāṇpataṟku **
paṇ pakarum vaṇṭiṉaṅkal̤ * paṇ pāṭum veṅkaṭattu *
cĕṇpakamāy niṟkum * tiru uṭaiyeṉ āveṉe (4)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

680. To see the divine feet of the lord(Māyon), who rests on the cool, milky ocean where fertile coral reeds grow, let me be born as a shenbagam flower in Thiruvenkatam hills, where bees swarm and sing His praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஒண் ஒளி வீசும்; பவள பவளங்கள் உள்ள; வேலை உலவு அலைகள் உலாவுகிற; தண் குளிர்ந்த; பாற்கடலுள் பாற்கடலில்; கண் துயிலும் கண் வளரும்; மாயோன் பெருமானுடைய; கழலிணைகள் இரு திருவடிகளை; காண்பதற்கு காண்பதற்கு; பண்பகரும் ரீங்கரிக்கும்; வண்டினங்கள் வண்டுகளால்; பண் பாடும் பண்ணிசை பாடப் பெற்ற; வேங்கடத்து திருமலையிலே; செண்பகமாய் சண்பக மரமாய்; நிற்கும் நிற்கும்; திரு உடையேன் வாய்ப்பு உடையவனாக; ஆவேனே ஆகக்கடவேனே
āveṉe i wish to; tiru uṭaiyeṉ have the opportunity; niṟkum to stand as; cĕṇpakamāy Champaka tree; veṅkaṭattu in Tirumala; vaṇṭiṉaṅkal̤ where bees; paṇpakarum swarm and; paṇ pāṭum sing with music; kāṇpataṟku and eager to see; kaḻaliṇaikal̤ the two divine feet; māyoṉ of the Lord; kaṇ tuyilum who rests; taṇ on the cool; pāṟkaṭalul̤ milky ocean; velai ulavu that contain waves with; ŏṇ radiant; paval̤a coral reeds

PMT 4.5

681 கம்பமதயானைக் கழுத்தகத்தின்மேலிருந்து *
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன் *
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலைமேல் *
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
681 கம்ப மத யானைக் * கழுத்தகத்தின்மேல் இருந்து *
இன்பு அமரும் செல்வமும் * இவ் அரசும் யான் வேண்டேன் **
எம்பெருமான் ஈசன் * எழில் வேங்கட மலை மேல் *
தம்பகமாய் நிற்கும் * தவம் உடையேன் ஆவேனே (5)
681 kampa mata yāṉaik * kazhuttakattiṉmel iruntu *
iṉpu amarum cĕlvamum * iv aracum yāṉ veṇṭeṉ **
ĕmpĕrumāṉ īcaṉ * ĕzhil veṅkaṭa malai mel *
tampakamāy niṟkum * tavam uṭaiyeṉ āveṉe (5)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

681. I don't long for royalty, riches and the pleasure of riding on a frightening elephant with pride. I wish to have the blessing of being born as a pole or a thorny bush in the beautiful Venkatam hills.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கம்பம் நடுக்கத்தை விளைவிக்கும்; மத யானை மதங்கொண்ட யானையின்; கழுத்தகத்தின் கழுத்தின்; மேல் இருந்து மீது வீற்றிருந்து; இன்பு அமரும் அனுபவிக்கும்படியான; செல்வமும் செல்வத்தையும்; இவ் அரசும் இந்த அரசாட்சியையும்; யான் வேண்டேன் நான் விரும்பமாட்டேன்; எம்பெருமான் எம்பெருமான்; ஈசன் ஈசன் உள்ள; எழில் வேங்கட அழகிய; மலை மேல் திருமலை மீது; தம்பகமாய் கம்பமாக புதராக; நிற்கும் நின்றிடும்; தவம் உடையேன் பாக்கியத்தை; ஆவேனே பெறக் கடவேன்
yāṉ veṇṭeṉ I willl not desire for; cĕlvamum the wealth; iṉpu amarum that allows the pleasure; mel iruntu of sitting; kaḻuttakattiṉ on the neck of; mata yāṉai a mad elephant; kampam that induces fear; iv aracum have no desire also for this kingship; āveṉe i wish to; tavam uṭaiyeṉ get the fortune of; niṟkum standing as; tampakamāy a pole or bush in; ĕḻil veṅkaṭa the beautiful; malai mel Tirumala; ĕmpĕrumāṉ where the Lord; īcaṉ resides

PMT 4.6

682 மின்னனையநுண்ணிடையார் உருப்பசியும்மேனகையும் *
அன்னவர்தம்பாடலொடும் ஆடலவையாதரியேன் *
தென்னவெனவண்டினங்கள் பண்பாடும்வேங்கடத்துள் *
அன்னனையபொற்குவடாம் அருந்தவத்தெனாவனே.
682 மின் அனைய நுண்ணிடையார் * உருப்பசியும் மேனகையும் *
அன்னவர்தம் பாடலொடும் * ஆடல் அவை ஆதரியேன் **
தென்ன என வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்துள் *
அன்னனைய பொற்குவடாம் * அருந்தவத்தென் ஆவேனே (6)
682 miṉ aṉaiya nuṇṇiṭaiyār * uruppaciyum meṉakaiyum *
aṉṉavartam pāṭalŏṭum * āṭal avai ātariyeṉ **
tĕṉṉa ĕṉa vaṇṭiṉaṅkal̤ * paṇ pāṭum veṅkaṭattul̤ *
aṉṉaṉaiya pŏṟkuvaṭām * aruntavattĕṉ āveṉe (6)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

682. I do not want to enjoy the dance and songs of the heavenly women Urvashi and Menaka, with waists as thin as lightning. I want to have the good fortune of being a golden peak in the Thiruvenkatam hills where bees swarm , buzz and sing His praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மின் அனைய மின்னல் போன்ற; நுண் இடையார் நுட்பமான இடை உடைய; உருப்பசியும் ஊர்வசியும்; மேனகையும் மேனகையும்; அன்னவர் தம் போன்றவர்களின்; பாடலொடும் பாட்டும்; ஆடல் அவை ஆடலுமாகியவற்றை; ஆதரியேன் விரும்ப மாட்டேன்; வண்டினங்கள் வண்டுகள்; தென்ன என தென தென என்று; பண்பாடும் ரீங்கரிக்கும்; வேங்கடத்துள் திருமலையிலே; அன்னனைய பொன்மயமான; பொற்குவடு ஆம் சிகரமாவதற்கு உரிய; அருந்தவத்தென் அருமையான தவத்தை; ஆவேனே உடையவனாக ஆவேன்
ātariyeṉ i will not like; āṭal avai the dance; pāṭalŏṭum and singing of; aṉṉavar tam women such as; uruppaciyum Urvashi and; meṉakaiyum Menaka; nuṇ iṭaiyār who have thin waist; miṉ aṉaiya like that of lightening; āveṉe I will become one who possess; aruntavattĕṉ the penance of; pŏṟkuvaṭu ām becoming a peak; aṉṉaṉaiya that is golden; veṅkaṭattul̤ at Tirumala; vaṇṭiṉaṅkal̤ where bees; paṇpāṭum buzz; tĕṉṉa ĕṉa thena thena (humming)

PMT 4.7

683 வானாளும்மாமதிபோல் வெண்குடைக்கீழ் * மன்னவர்தம்
கோனாகிவீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் *
தேனார்பூஞ்சோலைத் திருவேங்கடமலைமேல் *
கானாறாய்ப்பாயும் கருத்துடையேனாவேனே.
683 வான் ஆளும் மா மதி போல் * வெண் குடைக்கீழ் மன்னவர் தம் *
கோன் ஆகி வீற்றிருந்து * கொண்டாடும் செல்வு அறியேன் **
தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கட மலை மேல் *
கானாறாய்ப் பாயும் * கருத்து உடையேன் ஆவேனே (7)
683 vāṉ āl̤um mā mati pol * vĕṇ kuṭaikkīzh maṉṉavar tam *
koṉ āki vīṟṟiruntu * kŏṇṭāṭum cĕlvu aṟiyeṉ **
teṉ ār pūñcolait * tiruveṅkaṭa malai mel *
kāṉāṟāyp pāyum * karuttu uṭaiyeṉ āveṉe (7)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

683. I do not want the luxury of sitting under a white royal umbrella bright as the moon that rules the sky. I want to be a forest river that flows from the Thiruvenkatam hills surrounded by groves blooming with flowers that drip honey.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வான் ஆளும் வானம் முழுதையும் ஆளும்; விளங்குகின்ற பூரண; மாமதி போல் சந்திரன் போல்; வெண் வெண்மையான; குடைக்கீழ் குடையின் கீழே; மன்னவர் தம் ராஜாதிராஜர்களின்; கோன் ஆகி ராஜனாய் ஆகி; வீற்றிருந்து வீற்றிருந்து; கொண்டாடும் கொண்டாடப் படும்; செல்வு செல்வத்தை; அறியேன் லட்சியம் செய்யமாட்டேன்; தேன் ஆர் தேன் மிக்க; பூஞ்சோலை மலர்ச்சோலையுடைய; திரு வேங்கட மலை மேல் திருமலையின் மேல்; கானாறாய்ப் பாயும் ஒரு காட்டாறாகப் பாயும்; கருத்து உடையேன் கருத்துள்ளவனாக; ஆவேனே ஆவேன்
koṉ āki Becoming the king; vīṟṟiruntu and sitting on the throne; kŏṇṭāṭum celebrated; kuṭaikkīḻ under the umbrella; maṉṉavar tam of kings; vĕṇ that is white; māmati pol like a full; vil̤aṅkukiṉṟa moon; vāṉ āl̤um that rules the entire sky; cĕlvu that wealth and position; aṟiyeṉ are not my goal; āveṉe I will become; karuttu uṭaiyeṉ the one with the purpose; kāṉāṟāyp pāyum of flowing like a forest stream; tiru veṅkaṭa malai mel on Tirumala hills; teṉ ār where honey filled; pūñcolai grovese exists

PMT 4.8

684 பிறையேறுசடையானும் பிரமனுமிந்திரனும் *
முறையாயபெருவேள்விக் குறைமுடிப்பான்மறையானான் *
வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல் *
நெறியாய்க்கிடக்கும் நிலையுடையேனாவேனே.
684 பிறை ஏறு சடையானும் * பிரமனும் இந்திரனும் *
முறையாய பெரு வேள்விக் * குறை முடிப்பான் மறை ஆனான் **
வெறியார் தண் சோலைத் * திருவேங்கட மலை மேல் *
நெறியாய்க் கிடக்கும் * நிலை உடையேன் ஆவேனே (8)
684 piṟai eṟu caṭaiyāṉum * piramaṉum intiraṉum *
muṟaiyāya pĕru vel̤vik * kuṟai muṭippāṉ maṟai āṉāṉ **
vĕṟiyār taṇ colait * tiruveṅkaṭa malai mel *
nĕṟiyāyk kiṭakkum * nilai uṭaiyeṉ āveṉe (8)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

684. The god of Thiruvenkatam, helped Brahma, Indra and Shiva who carries the crescent moon on His matted hair, when they performed sacrifices. He is the meaning of the Vedas. I want to be a path on the Thiruvenkatam hills surrounded by cool fragrant groves, where He resides.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பிறை ஏறு பிறைச் சந்திரனை ஏற்று; சடையானும் முடியில் தரித்துள்ள சிவனும்; பிரமனும் பிரம்மாவும்; இந்திரனும் தேவேந்திரனும்; முறையாய முறைப்படி செய்யும்; பெரு வேள்வி பெரு வேள்வியில்; குறை அவர்கள் குறைகளை; முடிப்பான் தீர்த்து முடிப்பவனும்; மறை ஆனான் வேதமே வடிவாக ஆன; வெறியார் பரிமளம் மிக்க; தண் குளிர்ந்த; சோலை சோலையுடைய; திருவேங்கட திருவேங்கட; மலை மேல் மலை மீது செல்லும்; நெறியாய் பாதையாக; கிடக்கும் இருக்கின்ற; நிலை நிலையை; உடையேன் உடையவனாக; ஆவேனே ஆவேனே
muṭippāṉ the Lord is the resolver; kuṟai of deficiencies; pĕru vel̤vi in great sacrificial rites; muṟaiyāya that is done properly by; caṭaiyāṉum Shiva; piṟai eṟu bearing the crescent moon; piramaṉum Brahma,; intiraṉum and Indra; maṟai āṉāṉ He is the inner meaning of Vedas; āveṉe I shall become one; uṭaiyeṉ who has; nilai the state of; kiṭakkum being; nĕṟiyāy a path; malai mel that leads up to; tiruveṅkaṭa Tirumala; taṇ where cool; colai groves; vĕṟiyār with sacred fragrance exists

PMT 4.9

685 செடியாயவல்வினைகள் தீர்க்கும்திருமாலே! *
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின்வாசல் *
அடியாரும்வானவரும் அரம்பையரும்கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்து உன்பவளவாய்காண்பேனே. (2)
685 ## செடியாய வல்வினைகள் தீர்க்கும் * திருமாலே *
நெடியானே வேங்கடவா * நின் கோயிலின் வாசல் **
அடியாரும் வானவரும் * அரம்பையரும் கிடந்து இயங்கும் *
படியாய்க் கிடந்து * உன் பவளவாய் காண்பேனே (9)
685 ## cĕṭiyāya valviṉaikal̤ tīrkkum * tirumāle *
nĕṭiyāṉe veṅkaṭavā * niṉ koyiliṉ vācal **
aṭiyārum vāṉavarum * arampaiyarum kiṭantu iyaṅkum *
paṭiyāyk kiṭantu * uṉ paval̤avāy kāṇpeṉe (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

685. O Thirumal! You destroy the sins that have grown dense like bushes. O supreme One! The Lord of Thiruvenkatam hills! I wish to become a step at the threshold of your temple where devotees, the gods in the sky and the heavenly damsels throng and climb up to have your darshan and I will see your coral mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செடியாய புதர் போன்ற; வல்வினைகள் கொடிய வினைகளை; தீர்க்கும் திருமாலே! நீக்கும் திருமாலே; நெடியானே! பெரியோனே!; வேங்கடவா! வேங்கடமுடையானே!; நின் கோயிலின் உனது கோயிலின்; வாசல் வாசலிலே; அடியாரும் பக்தர்களும்; வானவரும் தேவர்களும்; அரம்பையரும் ரம்பை முதலிய தேவ கன்னியரும்; கிடந்து இயங்கும் இடைவிடாது நடந்து ஏறும்; படியாய்க் கிடந்து வாயிற்படியாய்க் கிடந்து; உன் பவளவாய் உனது பவழம் போன்ற அதரத்தை; காண்பேனே காண்பேனாக
veṅkaṭavā! the Lord of Venkata hills!; nĕṭiyāṉe! o great One!; tīrkkum tirumāle! the Lord who removes; cĕṭiyāya thicket-like; valviṉaikal̤ cruel karmas; paṭiyāyk kiṭantu I lie as a step; vācal at the sacred entrance of; niṉ koyiliṉ your temple; aṭiyārum for the devotees; vāṉavarum the gods; arampaiyarum and the heavenly maidens like Rambha; kiṭantu iyaṅkum to walk over and ascend without pause; uṉ paval̤avāy to behold Your coral-like lips; kāṇpeṉe may I see them!

PMT 4.10

686 உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
எம்பெருமான்பொன்மலைமேல் ஏதேனுமாவேனே.
686 உம்பர் உலகு ஆண்டு * ஒரு குடைக்கீழ் உருப்பசி தன் *
அம்பொன் கலை அல்குல் * பெற்றாலும் ஆதரியேன் **
செம் பவள வாயான் * திருவேங்கடம் என்னும் *
எம்பெருமான் பொன்மலை மேல் * ஏதேனும் ஆவேனே (10)
686 umpar ulaku āṇṭu * ŏru kuṭaikkīzh uruppaci taṉ *
ampŏṉ kalai alkul * pĕṟṟālum ātariyeṉ **
cĕm paval̤a vāyāṉ * tiruveṅkaṭam ĕṉṉum *
ĕmpĕrumāṉ pŏṉmalai mel * eteṉum āveṉe (10)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

686. Even if I were to become the king of the world of the gods, rule it beneath a sole umbrella and enjoy the nearness of Urvashi, whose waist is decorated with beautiful golden ornaments, I would not want it. O! let me become anything on the golden Thiruvenkatam hills of my lord, ,who has a coral- like mouth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
உம்பர் உலகு மேலுலகங்களை எல்லாம்; ஒரு குடைக் கீழ் ஒரே குடையின் கீழே; ஆண்டு அரசாண்டு; உருப்பசிதன் ஊர்வசியின்; அம்பொன் அழகிய பொன்னாடை; கலை அணிந்த; அல்குல் இடையை; பெற்றாலும் அடையப் பெறினும் அதை; ஆதரியேன் விரும்பமாட்டேன்; செம் பவள சிவந்த பவழம் போன்ற; வாயான் அதரத்தையுடைய; எம்பெருமான் எம்பெருமானின்; திருவேங்கடம் என்னும் திருவேங்கடம் எனும்; பொன் மலைமேல் திருமலையின் மேல்; ஏதேனும் ஏதேனுமொரு பொருளாக; ஆவேனே ஆவேன்
āṇṭu even if I could be the ruler; umpar ulaku of all the celestial worlds; ŏru kuṭaik kīḻ under one umbrella; pĕṟṟālum and if I could attain; uruppacitaṉ Urvashi; alkul with graceful waist; kalai adorned with; ampŏṉ beautiful golden ornaments; ātariyeṉ I will not desire those; āveṉe I will instead become; eteṉum some humble object; pŏṉ malaimel upon the sacred mountain; tiruveṅkaṭam ĕṉṉum called Thiruvenkatam; ĕmpĕrumāṉ where resided the Lord; cĕm paval̤a with red coral-like; vāyāṉ lips

PMT 4.11

687 மன்னியதண்சாரல் வடவேங்கடத்தான்தன் *
பொன்னியலும்சேவடிகள்காண்பான் புரிந்திறைஞ்சி *
கொன்னவிலும்கூர்வேல் குலசேகரன்சொன்ன *
பன்னியநூல்தமிழ்வல்லார் பாங்காயபத்தர்களே.
687 ## மன்னிய தண் சாரல் * வட வேங்கடத்தான் தன் *
பொன் இயலும் சேவடிகள் * காண்பான் புரிந்து இறைஞ்சி **
கொல் நவிலும் கூர்வேல் * குலசேகரன் சொன்ன *
பன்னிய நூல் தமிழ் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)
687 ## maṉṉiya taṇ cāral * vaṭa veṅkaṭattāṉ taṉ *
pŏṉ iyalum cevaṭikal̤ * kāṇpāṉ purintu iṟaiñci **
kŏl navilum kūrvel * kulacekaraṉ cŏṉṉa *
paṉṉiya nūl tamizh vallār * pāṅkāya pattarkal̤e (11)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

687. Wishing to see the golden shining feet of the lord , Kulasekharan with a sharp spear that kills his enemies worshipped the god of Thiruvenkatam hills, that has cool lovely slopes and composed pāsurams praising Him. If Tamil scholars learn these pāsurams of Kulasekharan well, they will become austere devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கொல் பகைவரை வெல்வதில்; நவிலும் தேர்ச்சி பெற்ற; கூர்வேல் கூர்மையான வேலையுடைய; குலசேகரன் குலசேகராழ்வார்; மன்னிய தண் மாறாத குளிர்ச்சியுள்ள; சாரல் சாரல்களையுடைய; வட வேங்கடத்தான் வடவேங்கடத்தில் இருக்கும்; தன் எம்பெருமானது; பொன் இயலும் பொன்போன்ற சிவந்த; சேவடிகள் திருவடிகளை; காண்பான் புரிந்து காண்பதற்கு ஆசைப்பட்டு; இறைஞ்சி சொன்ன துதித்துச் சொல்லிய; பன்னிய நன்கு அமைந்த இந்த; நூல் தமிழ் தமிழ் பாசுரங்களை; வல்லார் அனுஸந்திப்பவர்கள்; பாங்காய பெருமானின் மனதிற்கினிய; பத்தர்களே பக்தர்களாவர்
kulacekaraṉ Kulasekara Azhwar; kūrvel who has a sharp spear; navilum that is capable; kŏl of winning over enemies; kāṇpāṉ purintu yearning to see; pŏṉ iyalum the red gold-like; cevaṭikal̤ divine feet; taṉ of the Lord; vaṭa veṅkaṭattāṉ who resides in Tirumala; maṉṉiya taṇ that has unchanging cool; cāral drizzles and mist; iṟaiñci cŏṉṉa sang in praise; paṉṉiya well-crafted; nūl tamiḻ Tamil Hymns; vallār those who reflect upon them; pattarkal̤e will become devotees; pāṅkāya and dear to Lord's heart