PMT 1.8

அரவணையானைக் கண்டு இன்பக்கலவி எய்துவேனோ!

654 கோலார்ந்தநெடுஞ்சார்ங்கம்கூனற்சங்கம்
கொலையாழிகொடுந்தண்டுகொற்றவொள்வாள் *
காலார்ந்தகதிக்கருடனென்னும் வென்றிக்
கடும்பறவையிவையனைத்தும்புறஞ்சூழ்காப்ப *
சேலார்ந்தநெடுங்கழனிசோலைசூழ்ந்த
திருவரங்கதரவணையில்பள்ளிகொள்ளும் *
மாலோனைக்கண்டின்பக்கலவியெய்தி
வல்வினையேனென்றுகொலோவாழும்நாளே?
654 kol ārnta nĕṭuñcārṅkam kūṉal caṅkam *
kŏlaiyāḻi kŏṭuntaṇṭu kŏṟṟa ŏl̤ vāl̤ *
kāl ārnta katik karuṭaṉ ĕṉṉum * vĕṉṟik
kaṭumpaṟavai ivai aṉaittum puṟañcūḻ kāppa **
cel ārnta nĕṭuṅkaḻaṉi colai cūḻnta *
tiruvaraṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
māloṉaik kaṇṭu iṉpak kalavi ĕyti *
valviṉaiyeṉ ĕṉṟukŏlo vāḻum nāl̤e (8)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

654. The mighty bow with sharp arrows, the white conch, the severe discus(chakra) that destroys enemies, the strong club, the victorious sword and the speeding vehicle Garudā surround Him and protect Him, who rests on the snake-bed in Srirangam filled with groves and flourishing fields where fish frolic. When will be the day, when I, a sinner, will have the bliss of seeing Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கோல் ஆர்ந்த அம்புகளுடன் கூடிய; நெடும் சார்ங்கம் சார்ங்க வில்லும்; கூனற் சங்கம் வளைந்த சங்கும்; கொலை கொலை செய்ய வல்ல; ஆழி சக்கரமும்; கொடும் கொடுமையான; தண்டு கதையும்; கொற்ற வெற்றி தரும்; ஒள் வாள் ஒளிமிக்க வாளும்; கால் ஆர்ந்த வாயு வேகத்தில்; கதிக் கருடன் விரையும் கருடன்; என்னும் வென்றி என்னும் வெற்றியுடைய; கடும்பறவை வலிமையான பறவையும்; இவை அனைத்தும் இவை அனைத்தும்; புறம் சூழ் நாற்புறமும் சூழ்ந்துகொண்டு; காப்ப காக்க; சேல் ஆர்ந்த மீன்கள் நிரம்பிய; நீர்வளத்தால் நீர்வளத்தால் விசாலமான; நெடுங்கழனி கழனிகளாலும்; சோலை சூழ்ந்த சோலைகளாலும் சூழ்ந்த; திருவரங்கத்து ஸ்ரீரங்கத்தில்; அரவணையில் பாம்பணைமேல்; பள்ளி கொள்ளும் கண்வளரும்; மாலோனைக் கண்டு எம்பெருமானை கண்டு; இன்ப ஆனந்த; கலவி எய்தி அனுபவத்தைப்பெற்று; வல்வினையேன் மகாபாபியான அடியேன்; வாழும் நாளே! வாழும் நாள்; என்று கொலோ என்றைக்கோ
nĕṭum cārṅkam the saranga bow; kol ārnta and the arrows; kūṉaṟ caṅkam curved conch; āḻi the discus; kŏlai that is capable of destruction; kŏṭum the fierce; taṇṭu mace; ŏl̤ vāl̤ the radiant sword; kŏṟṟa that grants victory; ĕṉṉum vĕṉṟi and the victorious; kaṭumpaṟavai powerful bird; katik karuṭaṉ Garuda. who moves swiftly; kāl ārnta like wind; ivai aṉaittum all; puṟam cūḻ surround Him from all corners; kāppa and protect; ĕṉṟu kŏlo when will the time come; valviṉaiyeṉ for this sinner; vāḻum nāl̤e! to live; kalavi ĕyti attaining the experience; iṉpa of bliss by; māloṉaik kaṇṭu seeing the Lord who is; pal̤l̤i kŏl̤l̤um resting; aravaṇaiyil upon the serpent; tiruvaraṅkattu in Sri Rangam; colai cūḻnta that is filled with groves; nĕṭuṅkaḻaṉi rice fields and; nīrval̤attāl expansive water bodies; cel ārnta filled with fishes