PMT 1.4

அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!

650 மாவினைவாய்பிளந்துகந்தமாலைவேலை
வண்ணணைஎன்கண்ணணை * வன்குன்றமேந்தி
ஆவினையன்றுய்யக்கொண்டஆயரேற்றை
அமரர்கள் தந்தலைவனைஅந்தமிழினின்பப்
பாவினை * அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரங்கத்தரவணையில்பள்ளிகொள்ளும் *
கோவினை நாவுறவழுத்திஎன்றன்கைகள்
கொய்ம்மலர்தூய்என்றுகொலோகூப்பும்நாளே?
650 māviṉai vāy pil̤antu ukanta mālai * velai
vaṇṇaṉai ĕṉ kaṇṇaṉai * vaṉ kuṉṟam enti
āviṉai aṉṟu uyyak kŏṇṭa āyar-eṟṟai *
amararkal̤ tam talaivaṉai an tamiḻiṉ iṉpap
pāviṉai ** av vaṭamŏḻiyai paṟṟu-aṟṟārkal̤ *
payil araṅkattu aravaṇaiyil pal̤l̤ikŏl̤l̤um *
koviṉai nā uṟa vaḻutti ĕṉtaṉ kaikal̤ *
kŏymmalar tūy ĕṉṟukŏlo kūppum nāl̤e (4)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

650. He is the One who tore Kesi's mouth who came as a horse. He lifted the Govardhanā mountain to protect the cows. He is a strong bull among the cowherds. He is the king of the gods in the sky and is sweet as Tamil and Sanskrit poetry. He rests on the snake bed in Srirangam, where sages praise Him with their tongues. When will the day come when I fold my hands and worship the ocean-colored lord, offering the pure fresh flowers with my hands for Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாவினை குதிரை வடிவில் வந்த கேசியின்; வாய் பிளந்து வாயைக் கிழித்து; உகந்த மாலை மனம் நிறைந்த பெருமான்; வேலை வண்ணனை கடல் நிறமுடைய; என் கண்ணனை எம் பெருமானை; வன் குன்றம் வலிய கோவர்த்தன மலையை; ஏந்தி தூக்கி; ஆவினை அன்று முன்பு பசுக்களை; உய்யக் கொண்ட காப்பாற்றிய; ஆயர் ஏற்றை ஆயர் தலைவனை; அமரர்கள் தம் தேவர்களின்; தலைவனை தலைவனை; அந் தமிழின் அழகிய தமிழ் மொழியால்; இன்ப பாவினை இனிய பாடலை; அவ் வடமொழியை வடமொழியை; பற்று அற்றார்கள் பற்று அற்றவர்கள்; பயில் ஓதுவதுபோல்; அரங்கத்து அரங்கத்து; அரவணையில் அனந்தாழ்வான் மீது; பள்ளி கொள்ளும் கண்வளரும்; கோவினை ஸ்வாமியை; நா உற நாக்குத் தழும்பேறும்படி; வழுத்தி துதித்து; என்தன் கைகள் என்னுடைய கைகளால்; கொய்ம்மலர் தூய் கொய்த மலரைத் தூவி; கூப்பும் வணங்கும்