Chapter 3

Requesting the god of Thirumālirunjolai not to leave the devotee’s heart - (துக்கச் சுழலையை)

திருமாலிருஞ்சோலைப் பெருமானைப் போகவிடேன் எனல்
Requesting the god of Thirumālirunjolai not to leave the devotee’s heart - (துக்கச் சுழலையை)

The Lord residing in Thirumaliruncholai is known by the divine name Azhagar. Krishna himself is Azhagar! Periyāzhvār has immense devotion towards Krishna. Azhagar's beauty and the charm of the Maliruncholai hills captivated the āzhvār's divine heart. When the Lord came to āzhvār and said, "I will leave now and be back," āzhvār responded, "You are rare

+ Read more

திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் அழகர் என்ற திருநாமம் பெற்றவர். கண்ணனே அழகர்! பெரியாழ்வாருக்குக் கண்ணனிடம் மிக்க ஈடுபாடு. அழகரின் ஸௌந்தர்யமும், மாலிருஞ்சோலை மலையும் ஆழ்வாரின் திருவுள்ளத்தைக் கவர்ந்தன. ஆழ்வாரிடம் வந்த எம்பெருமான் "சென்று வருகிறேன்" என்றான். "நீ

+ Read more
Verses: 453 to 462
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will become devotees of the god who measured the world
  • PAT 5.3.1
    453 ## துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த * வலையை அறப்பறித்து *
    புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் * இனிப் போக விடுவதுண்டே? **
    மக்கள் அறுவரைக் கல்லிடை மோத * இழந்தவள் தன் வயிற்றில் *
    சிக்கென வந்து பிறந்து நின்றாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (1)
  • PAT 5.3.2
    454 வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் * உன் தன் இந்திர ஞாலங்களால் *
    ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் * நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை **
    அளித்து எங்கும் நாடும் நகரமும் * தம்முடைத் தீவினை தீர்க்கல் உற்று *
    தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடைத் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (2)
  • PAT 5.3.3
    455 உனக்குப் பணி செய்திருக்கும் தவம் உடையேன் * இனிப் போய் ஒருவன்
    தனக்குப் பணிந்து * கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் **
    புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி * உன் பொன்னடி வாழ்க என்று *
    இனக் குறவர் புதியது உண்ணும் * எழில் மாலிருஞ் சோலை எந்தாய்! (3)
  • PAT 5.3.4
    456 காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு * அங்கு ஓர் நிழல் இல்லை * நீருமில்லை உன்
    பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் * நான் எங்கும் காண்கின்றிலேன் **
    தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் * அங்கு ஓர் பொய்ச்சுற்றம் பேசிச் சென்று *
    பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (4)
  • PAT 5.3.5
    457 காலும் எழா கண்ண நீரும் நில்லா * உடல் சோர்ந்து நடுங்கி * குரல்
    மேலும் எழா மயிர்க் கூச்சும் அறா * என தோள்களும் வீழ்வு ஒழியா **
    மால் உகளாநிற்கும் என் மனனே! * உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் *
    சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (5)
  • PAT 5.3.6
    458 எருத்துக் கொடி உடையானும் * பிரமனும் இந்திரனும் * மற்றும்
    ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு * மருந்து அறிவாரும் இல்லை **
    மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா! * மறு பிறவி தவிரத்
    திருத்தி * உன் கோயில் கடைப் புகப்பெய் * திரு மாலிருஞ் சோலை எந்தாய் (6)
  • PAT 5.3.7
    459 அக்கரை என்னும் அனத்தக் கடலுள் அழுந்தி * உன் பேர் அருளால் *
    இக்கரை ஏறி இளைத்திருந்தேனை * அஞ்சேல் என்று கை கவியாய்! **
    சக்கரமும் தடக்கைகளும் * கண்களும் பீதக ஆடையொடும் *
    செக்கர் நிறத்துச் சிவப்புடையாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (7)
  • PAT 5.3.8
    460 எத்தனை காலமும் எத்தனை ஊழியும் * இன்றொடு நாளை என்றே *
    இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன் * இனி உன்னைப் போகலொட்டேன் **
    மைத்துனன்மார்களை வாழ்வித்து * மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்! *
    சித்தம் நின்பாலது அறிதி அன்றே * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (8)
  • PAT 5.3.9
    461 அன்று வயிற்றில் கிடந்திருந்தே * அடிமை செய்யல் உற்றிருப்பன் *
    இன்று வந்து இங்கு உன்னைக் கண்டுகொண்டேன் * இனிப் போக விடுவதுண்டே? **
    சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் * திருச்சக்கரம் அதனால் *
    தென்றித் திசை திசை வீழச் செற்றாய்! * திரு மாலிருஞ் சோலை எந்தாய்! (9)
  • PAT 5.3.10
    462 ## சென்று உலகம் குடைந்தாடும் சுனைத் * திரு மாலிருஞ் சோலை தன்னுள்
    நின்ற பிரான் * அடிமேல் அடிமைத் திறம் * நேர்பட விண்ணப்பஞ்செய் **
    பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் * புதுவைக்கோன் விட்டுசித்தன் *
    ஒன்றினோடு ஒன்பதும் பாட வல்லார் * உலகம் அளந்தான் தமரே (10)