The Majesty of Tirumāliruñcōlai: The Mountain of Him Who Rescued the Goddess Rukmiṇī
திருமாலிருஞ்சோலையின் மாட்சி ருக்மிணிப் பிராட்டியை மீட்டவன் மலை
349 உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற *
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை *
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு *
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2)