PAT 3.6.1

The Glory of Kaṇṇaṉ's Flute-Playing: The Young Cowherd Maidens, Mesmerized by the Flute's Music

கண்ணன் வேய்ங்குழலூதிய சிறப்பு குழலிசையில் மயங்கிய கோவலர் சிறுமியர்

275 நாவலம்பெரியதீவினில்வாழும்

நங்கைமீர்கள்! இதுஓரற்புதம்கேளீர் *

தூவலம்புரியுடையதிருமால்

தூயவாயில்குழலோசைவழியே *

கோவலர்சிறுமியர்இளங்கொங்கை

குதுகலிப்பஉடலுளவிழ்ந்து * எங்கும்

காவலும்கடந்துகயிறுமாலையாகி

வந்துகவிழ்ந்துநின்றனரே. (2)

Text size