PAT 3.5.4

The Mountain Held Aloft by the Lord of the Devas

தேவர் பெருமான் கொண்டு நின்ற மலை

267 கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்

கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் *

அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு

அமரர்பெருமான்கொண்டுநின்றமலை *

கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்

கதுவாய்ப்படநீர்முகந்தேறி * எங்கும்

குடவாய்ப்படநின்றுமழைபொழியும்

கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.

Text size