The Adorned Child Who Plays the Flute
குழலூதும் அலங்காரப் பிள்ளை
262 வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்து
மல்லிகைவனமாலைமௌவல்மாலை *
சிலிங்காரத்தால்குழல்தாழவிட்டுத்
தீங்குழல்வாய்மடுத்தூதியூதி *
அலங்காரத்தால்வருமாயப்பிள்ளை
அழகுகண்டுஎன்மகள்ஆசைப்பட்டு *
விலங்கிநில்லாதுஎதிர்நின்றுகண்டீர்
வெள்வளைகழன்றுமெய்ம்மெலிகின்றதே.