The Mother Laments Having Sent Kaṇṇaṉ After the Calves: The Tender Sprout of the Cowherd Clan?
கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் இரங்குதல் - ஆயர் குலக் கொழுந்து ?
234 அஞ்சனவண்ணனை ஆயர்கோலக்கொழுந்தினை *
மஞ்சனமாட்டி மனைகள்தோறும்திரியாமே *
கஞ்சனைக்காய்ந்த கழலடிநோவக்கன்றின்பின் *
என்செயப்பிள்ளையைப்போக்கினேன்? எல்லேபாவமே. (2)