The Red-eyed Lord, Keśava
செங்கண்மால் கேசவன்
95 திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் * தன்
திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர *
பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்
தருநீர் * சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ.