PAT 1.5.3

O Trivikrama, Champion Bull of the Cowherds!

திரிவிக்கிரமனே ஆயர் போரேறு

66 நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே1

நாவியுள்நற்கமலநான்முகனுக்கு * ஒருகால்

தம்மனையானவனே! தரணிதலமுழுதும்

தாரகையின்னுலகும் தடவிஅதன்புறமும் *

விம்மவளர்ந்தவனே! வேழமும்ஏழ்விடையும்

விரவியவேலைதனுள்வென்றுவருமவனே! *

அம்ம! எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை

ஆயர்கள்போரேறே! ஆடுகஆடுகவே.

Text size