NAT 12.5

Take Me to the Pond Where He Danced on Kāliya's Head

காளியனுச்சியில் நடமாடிய பொய்கைக்கு என்னை உய்த்திடுமின்

621 ஆர்க்குமென்நோயிதறியலாகாது

அம்மனை மீர்! துழதிப்படாதே *

கார்க்கடல் வண்ணனென்பானொருவன்

கைகண்டயோகம்தடவத்தீரும் *

நீர்க்கரைநின்றகடம்பையேறிக்

காளியனுச்சியில்நட்டம்பாய்ந்து *

போர்க்களமாகநிருத்தஞ்செய்த

பொய்கைக்கரைக்கென்னையுய்த்திடுமின்.

Text size