Grant that Trivikrama May Touch Me
திரிவிக்கிரமன் என்னைத் தொடுமாறு அருள்
510 காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் *
கட்டி யரிசி யவலமைத்து *
வாயுடை மறையவர் மந்திரத்தால் *
மன்மதனேஉன்னை வணங்குகின்றேன் **
தேசமுன் னளந்தவன் திரிவிக்கிரமன் *
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம் *
சாயுடை வயிறுமென் தடமுலையும் *
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே (7)