Srivilliputhur
Your browser does not support the audio element.
audio
133 மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டு *
இன்னிசைக்கும்வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய்! உன்னைக்கண்டார் *
என்னநோன்புநோற்றாள்கொலோ இவனைப்பெற்றவயிறுடையாள்! *
என்னும்வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே. (2)
549 மென்னடையன்னம்பரந்துவிளையாடும்
வில்லிபுத்தூருறைவான்றன் *
பொன்னடிகாண்பதோராசையினால் என்
பொருகயற்கண்ணிணை துஞ்சா *
இன்னடிசிலொடுபாலமுதூட்டி
எடுத்தவென்கோலக்கிளியை *
உன்னொடுதோழமைகொள்ளுவன்குயிலே!
உலகளந்தான்வரக்கூவாய். (2)