Āduturai Perumāl Koil
Your browser does not support the audio element.
audio
1358 தாம்தம்பெருமையறியார் * தூது
வேந்தர்க்காய வேந்தரூர்போல் *
காந்தள்விரல் மென்கலைநன்மடவார் *
கூந்தல்கமழும் கூட லூரே. (2)
1359 செறுந்திண்திமிலேறுடைய * பின்னை
பெறும்தண்கோலம் பெற்றாரூர்போல் *
நறுந்தண்தீந்தேன் உண்டவண்டு *
குறிஞ்சிபாடும் கூட லூரே.
1360 பிள்ளையுருவாய்த் தயிருண்டு * அடியே
னுள்ளம்புகுந்த ஒருவரூர்போல் *
கள்ளநாரை வயலுள் * கயல்மீன்
கொள்ளைகொள்ளும் கூட லூரே.
1361 கூற்றேருருவின் குறளாய் * நிலம்நீர்
ஏற்றான் எந்தைபெருமானூர்போல் *
சேற்றேருழவர் கோதைப்போதூண் *
கோல்தேன்முரலும் கூட லூரே.
1362 தொண்டர்பரவச் சுடர்சென்றணவ *
அண்டத்துஅமரும் அடிகளூர்போல் *
வண்டலலையுள் கெண்டைமிளிர *
கொண்டலதிரும் கூட லூரே.
1363 தக்கன்வேள்வி தகர்த்ததலைவன் *
துக்கம்துடைத்த துணைவரூர்போல் *
எக்கலிடு நுண்மணல்மேல் * எங்கும்
கொக்கின்பழம்வீழ் கூட லூரே.
1364 கருந்தண்கடலும் மலையும்உலகும் *
அருந்தும்அடிகள் அமரும்ஊர்போல் *
பெருந்தண்முல்லைப் பிள்ளையோடி *
குருந்தம்தழுவும் கூட லூரே.
1365 கலைவாழ்பிணையோடு அணையும் * திருநீர்
மலைவாழ்எந்தை மருவும்ஊர்போல் *
இலைதாழ்தெங்கின் மேல்நின்று * இளநீர்க்
குலைதாழ்கிடங்கின் கூட லூரே.
1366 பெருகுகாதல் அடியேனுள்ளம் *
உருகப்புகுந்த ஒருவரூர்போல் *
அருகு கைதைமலர * கெண்டை
குருகென்றஞ்சும் கூட லூரே.
1367 காவிப்பெருநீர்வண்ணன் * கண்ணன்
மேவித்திகழும் கூடலூர்மேல் *
கோவைத்தமிழால் கலியன்சொன்ன *
பாவைப்பாடப் பாவம்போமே (2)