TVT 77

மாலைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல்

2554 திங்களம்பிள்ளைபுலம்ப தன்செங்கோலரசுபட்ட *
செங்களம்பற்றி நின்றெள்குபுன்மாலை * தென்பாலி லங்கை
வெங்களஞ்செய்த நம்விண்ணோர்பிரானார் துழாய் துணையா
நங்களைமாமைகொள்வான் * வந்துதோன்றி நலிகின்றதே.
2554 tiṅkal̤ am pil̤l̤ai pulampa * taṉ cĕṅkol aracu paṭṭa *
cĕṅ kal̤am paṟṟi niṉṟu ĕl̤ku puṉ mālai ** tĕṉpāl ilaṅkai
vĕṅ kal̤am cĕyta nam viṇṇor pirāṉār tuzhāy tuṇaiyā *
naṅkal̤ai māmai kŏl̤vāṉ * vantu toṉṟi nalikiṉṟate77

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2554. She says, “Evening has come and the sun, the king of the day, sets after ruling the world and the crescent moon rises slowly. The thulasi garland of the god of the gods in the sky who fought with the Raksasas in southern Lankā and destroyed them appears before me, makes me pallid and hurts me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் பிள்ளை அழகிய புத்திரனான; திங்கள் பிறைச் சந்திரன் தந்தையான; செங்கோல் ஒளியையுடைய சூரியன் அஸ்தமிக்க; தன் அரசு பட்ட அவன் மாண்டுவிட்டான்; புலம்ப என்று அழ; செங் களம் சிவந்த; செவ்வானமாகிய போர்க்களத்தை; பற்றி நின்று அடைந்து நின்று; எள்கு புன் வருந்தும்; மாலை மாலைப் பொழுதான பெண்; தென்பால் தெற்கு திசையிலுள்ள; இலங்கை இலங்கையை; வெங் களம் கொடிய போர்க்களமாக; செய்த செய்த; நம் விண்ணோர் நித்யஸூரிகளின் தலைவனான; பிரானார் எம்பெருமானின்; துழாய் துளசி மாலையை; துணையா துணையாகக்கொண்டு; நங்களை மாமை நமது மாமை நிறத்தை; கொள்வான் வந்து கவர்வதற்காக நம் எதிரில் வந்து; தோன்றி நலிகின்றதே தோன்றி வருத்துகிறாள்
thingal̤ chandhiran (moon); am beautiful; pil̤l̤ai son; pulamba weeping (due to the sounds of birds); sengŏl one who was ruling with his sceptre; than arasu his king sūriyan (sun); patta fell down (sun set); sem reddish; kal̤am battle field; paṝi attaining; ninṛu remaining; el̤gum engaging with; punmālai short duration of dusk; thenpāl in the southern direction; ilangai lankā; vengal̤am seydha made it into a cremation ground; viṇṇŏr by celestial entities such as brahmā et al; pirānār lord, who is apt to be worshipped; nam worn by our chakravarthy thirumagan (son of emperor dhaṣaratha); thuzhāy desire which was created in the divine thul̤asi; thuṇaiyā as helping hand; nangal̤ai us; māmai kol̤vān to destroy the natural complexion; vandhu reaching; thŏnṛi rising; naliginṛadhu is tormenting