TVT 36

தலைவன் கொடுமையைப் பாங்கி கூறல்

2513 துழாநெடுஞ்சூழிருளென்று * தன்தண்தாரது, பெயரா
எழாநெடுவூழியெழுந்தவிக்காலத்தும் * ஈங்கிவளோ!
வழாநெடுந்துன்பத்தளென்றிரங்காரம்மனோ! இலங்கைக்
குழாநெடுமாடம் * இடித்தபிரானார்கொடுமைகளே!
2513 tuzhā nĕṭum cūzh irul̤ ĕṉṟu * taṉ taṇ tār atu pĕyarā
ĕzhā nĕṭu ūzhi * ĕzhunta ik kālattum ** īṅku ival̤o
vazhā nĕṭun tuṉpattal̤ ĕṉṟu iraṅkār ammaṉo * ilaṅkaik
kuzhā nĕṭu māṭam * iṭitta pirāṉār kŏṭumaikal̤e36

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2513. Her friend says, “The night is getting dark and the world looks as if the end of the eon had arrived. She always prattles, saying, ‘cool thulasi garland, ’ but our father who destroyed the forts in Lankā surrounded with tall palaces does not feel sorry for her suffering. How could he be so cruel to her?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தம் தண் தன்னுடைய குளிர்ந்த; தார் அது துளசிமாலையை விரும்பிய; பெயரா காரணத்தாலேயே; துழா நெடும் முடிவில்லாத நிறைந்த; சூழ் இருள் என்று இருள் பொழுது ஒன்று; எழா நெடு ஊழி கல்பம் போல் நீண்டு; எழுந்த கொண்டிருக்கும்; இக் காலத்தும் இந்த நேரத்திலும்; ஈங்கு இவ்விடத்துத் தனிமை என்ற; வழா நெடும் பொறுக்க முடியாத; துன்பத்தள் துன்பம் அநுபவிக்கிறாள்; என்று இவளோ என்று இவள் மீது; இரங்கார் இரக்கம் கொண்டு அருள வில்லையே; அம்மனோ! அந்தோ!; இலங்கை இலங்கையிலுள்ள; குழா நெடு மாடம் அநேக மாடமாளிகைகளை; இடித்த பிரானார் இடித்த பெருமானின்; கொடுமைகளே! கொடுமைகள் தான் என்னே!
than belonging to self; thaṇ cool; thār adhu desire towards the divine thul̤asi; peyarā as the reason; thuzhā touching gently; nedum completely; sūzh pervading; irul̤ enṛu called as darkness; ezhā without enervation; nedu unending; ūzhi kalpam (a day of brahmā); ezhundha started; ikkālaththum during this time too; īngu here; ival̤ this nāyaki; vazhā without missing; nedum thunbaththal̤ enṛeṇṇi thinking that she is suffering from great sorrow; irangār he is not showing mercy; ilangai in lankā; kuzhām gathered in abundance; nedu mādam huge mansions; idiththa one who destroyed; pirānār the benefactor; kodumaigal̤ cruel acts; ammanŏ how terrible