Chapter 9

Āzhvār feeling blessed and indebted for the ability to sing about the Lord - (என்றைக்கும் என்னை)

இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்
Āzhvār asks for one thing, but emperumAn distracts him and makes him forget his original thought process. One day, Āzhvār caught Bhagavān in a stronghold and said, “emperumAnE! What deficiency do you see in me?! Why are you torturing me like this?! Is it appropriate for your greatness to still keep me in this world?” Bhagavān responds, “ Āzhvār! Don’t + Read more
ஆழ்வார் ஒன்று கேட்டால் எம்பெருமான் ஒன்று சொல்லி அவரது எண்ணத்தை மறக்கச் செய்து வந்தான். ஒரு நாள் ஆழ்வார் பகவானை வலியப் பிடித்துக்கொண்டார். “எம்பெருமானே! என்னிடம் என்ன குறை கண்டாய்! என்னை ஏன் இப்படித் துன்புறுத்துகிறாய்! இந்தப் பூமியிலேயே என்னை வைத்திருப்பது உன் பெருமைக்குத் தகுமா?” + Read more
Verses: 3541 to 3551
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will obtain the joy of reaching the god
  • TVM 7.9.1
    3541 ## என்றைக்கும் என்னை * உய்யக்கொண்டு போகிய *
    அன்றைக்கு அன்று என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை **
    இன் தமிழ் பாடிய ஈசனை * ஆதியாய்
    நின்ற என் சோதியை * என் சொல்லி நிற்பனோ? (1)
  • TVM 7.9.2
    3542 என் சொல்லி நிற்பன் * என் இன் உயிர் இன்று ஒன்றாய் *
    என் சொல்லால் யான் சொன்ன * இன் கவி என்பித்து **
    தன் சொல்லால் தான் தன்னைக் * கீர்த்தித்த மாயன் * என்
    முன் சொல்லும் * மூவுருவாம் முதல்வனே? (2)
  • TVM 7.9.3
    3543 ஆ முதல்வன் இவன் என்று * தன் தேற்றி * என்
    நா முதல் வந்து புகுந்து * நல் இன் கவி **
    தூ முதல் பத்தர்க்குத் * தான் தன்னைச் சொன்ன * என்
    வாய் முதல் அப்பனை * என்று மறப்பனோ? (3)
  • TVM 7.9.4
    3544 அப்பனை என்று மறப்பன் * என் ஆகியே *
    தப்புதல் இன்றித் * தனைக் கவி தான் சொல்லி **
    ஒப்பிலாத் தீவினையேனை * உய்யக்கொண்டு *
    செப்பமே செய்து * திரிகின்ற சீர்கண்டே? (4)
  • TVM 7.9.5
    3545 சீர் கண்டுகொண்டு * திருந்து நல் இன்கவி *
    நேர்பட யான் சொல்லும் * நீர்மை இலாமையில் **
    ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
    பார் பரவு இன் கவி * பாடும் பரமரே (5)
  • TVM 7.9.6
    3546 இன் கவி பாடும் * பரம கவிகளால் *
    தன் கவி தான் தன்னைப் * பாடுவியாது இன்று **
    நன்கு வந்து என்னுடன் ஆக்கி * என்னால் தன்னை *
    வன் கவி பாடும் * என் வைகுந்த நாதனே (6)
  • TVM 7.9.7
    3547 வைகுந்த நாதன் * என வல்வினை மாய்ந்து அற *
    செய் குந்தன் தன்னை * என் ஆக்கி என்னால் தன்னை **
    வைகுந்தன் ஆகப் புகழ * வண் தீம் கவி *
    செய் குந்தன் தன்னை * எந் நாள் சிந்தித்து ஆர்வனோ? (7)
  • TVM 7.9.8
    3548 ஆர்வனோ ஆழி அங்கை * எம் பிரான் புகழ் *
    பார் விண் நீர் முற்றும் * கலந்து பருகிலும் **
    ஏர்வு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
    சீர்பெற இன் கவி * சொன்ன திறத்துக்கே? (8)
  • TVM 7.9.9
    3549 திறத்துக்கே துப்புரவு ஆம் * திருமாலின் சீர் *
    இறப்பு எதிர் காலம் * பருகிலும் ஆர்வனோ **
    மறப்பு இலா என்னைத் * தன்னாக்கி என்னால் தன்னை *
    உறப் பல இன் கவி * சொன்ன உதவிக்கே? (9)
  • TVM 7.9.10
    3550 உதவிக் கைம்மாறு * என் உயிர் என்ன உற்று எண்ணில் *
    அதுவும் மற்று ஆங்கவன் * தன்னது என்னால் தன்னை **
    பதவிய இன் கவி * பாடிய அப்பனுக்கு *
    எதுவும் ஒன்றும் இல்லை * செய்வது இங்கும் அங்கே (10)
  • TVM 7.9.11
    3551 ## இங்கும் அங்கும் * திருமால் அன்றி இன்மை கண்டு *
    அங்ஙனே வண் குருகூர்ச் * சடகோபன் **
    இங்ஙனே சொன்ன * ஓர் ஆயிரத்து இப் பத்தும் *
    எங்ஙனே சொல்லினும் * இன்பம் பயக்குமே (11)