Chapter 7
Mother laments on seeing her daughter head towards the Lord's city - (உண்ணும் சோறு)
தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)
These hymns are also from the mother’s point of view. The mother lies beside her daughter, parānkusa nāyaki; and she falls asleep; when she awakens after some time, she finds her daughter missing from the bed. She starts looking for her daughter but doesn’t seem to find her; she initially speculates someone has kidnapped her daughter; Later, she says + Read more
இதுவும் தாய் சொல்லும் பகுதியே. பராங்குச நாயகியாகிய தம் மகளோடு தாய் படுத்திருக்கிறாள்; உறங்கிவிடுகிறாள்; சிறிது நேரத்தில் கண் திறந்து பார்க்கும்போது படுக்கையில் பெண் காணவில்லை. தேடுகிறாள்; கிடைக்கவில்லை. எவரேனும் கவர்ந்து சென்றனரோ என்று சிந்திக்கிறாள்; பிறகு “இவளுக்குத் திருக்கோளூர் + Read more
Verses: 3409 to 3419
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பழஞ்சுரம்
Timing: AFTERNOON
Recital benefits: will reach the golden world of moksha and rule there
- TVM 6.7.1
3409 ## உண்ணும் சோறு பருகும் நீர் * தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் * எம் பெருமான் என்று என்றே * கண்கள் நீர் மல்கி **
மண்ணினுள் அவன் சீர் * வளம் மிக்கவன் ஊர் வினவி *
திண்ணம் என் இளமான் புகும் ஊர் * திருக்கோளூரே (1) - TVM 6.7.2
3410 ஊரும் நாடும் உலகமும் * தன்னைப்போல் அவனுடைய *
பேரும் தார்களுமே பிதற்ற * கற்பு வான் இடறி **
சேரும் நல் வளம் சேர் * பழனத் திருக்கோளூர்க்கே *
போரும் கொல் உரையீர் * கொடியேன் கொடி பூவைகளே? (2) - TVM 6.7.3
3411 பூவை பைங்கிளிகள் * பந்து தூதை பூம் புட்டில்கள் *
யாவையும் திருமால் * திருநாமங்களே கூவி எழும் ** என்
பாவை போய் இனித் * தண் பழனத் திருக்கோளூர்க்கே *
கோவை வாய் துடிப்ப * மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ? (3) - TVM 6.7.4
3412 கொல்லை என்பர்கொலோ * குணம் மிக்கனள் என்பர்கொலோ *
சில்லை வாய்ப் பெண்டுகள் * அயல் சேரி உள்ளாரும்? எல்லே **
செல்வம் மல்கி அவன்கிடந்த * திருக்கோளூர்க்கே *
மேல் இடை நுடங்க * இளமான் செல்ல மேவினளே (4) - TVM 6.7.5
3413 மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் * என் சிறுத்
தேவி போய் * இனித் தன் திருமால் * திருக்கோளூரில் **
பூ இயல் பொழிலும் * தடமும் அவன் கோயிலும் கண்டு *
ஆவி உள் குளிர * எங்ஙனே உகக்கும்கொல் இன்றே? (5) - TVM 6.7.6
3414 இன்று எனக்கு உதவாது அகன்ற * இளமான் இனிப் போய் *
தென் திசைத் திலதம் அனைய * திருக்கோளூர்க்கே
சென்று ** தன் திருமால் திருக்கண்ணும் * செவ்வாயும் கண்டு *
நின்று நின்று நையும் * நெடும் கண்கள் பனி மல்கவே (6) - TVM 6.7.7
3415 மல்கு நீர்க் கண்ணொடு * மையல் உற்ற மனத்தினளாய் *
அல்லும் நன் பகலும் * நெடுமால் என்று அழைத்து இனிப் போய் **
செல்வம் மல்கி அவன் கிடந்த * திருக்கோளுர்க்கே *
ஒல்கி ஒல்கி நடந்து * எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே? (7) - TVM 6.7.8
3416 ஒசிந்த நுண் இடைமேல் * கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் * கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்? **
ஒசிந்த ஒண் மலராள் * கொழுநன் திருக்கோளூர்க்கே *
கசிந்த நெஞ்சினளாய் * எம்மை நீத்த எம் காரிகையே? (8) - TVM 6.7.9
3417 காரியம் நல்லனகள் * அவை காணில் என் கண்ணனுக்கு என்று *
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் * கிடக்க இனிப் போய் **
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் * திருக்கோளூர்க்கே *
நேரிழை நடந்தாள் * எம்மை ஒன்றும் நினைந்திலளே (9) - TVM 6.7.10
3418 நினைக்கிலேன் தெய்வங்காள் * நெடும் கண் இளமான் இனிப் போய் *
அனைத்து உலகும் உடைய * அரவிந்தலோசனனை **
தினைத்தனையும் விடாள் * அவன் சேர் திருக்கோளூர்க்கே *
மனைக்கு வான் பழியும் நினையாள் * செல்ல வைத்தனளே (10) - TVM 6.7.11
3419 ## வைத்த மா நிதியாம் * மதுசூதனையே அலற்றி *
கொத்து அலர் பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொன்ன *
பத்து நூற்றுள் இப் பத்து ** அவன் சேர் திருக்கோளூர்க்கே *
சித்தம் வைத்து உரைப்பார் * திகழ் பொன் உலகு ஆள்வாரே (11)