TNT 3.26

வண்டே! என் நிலையைக் கண்ணனுக்குக் கூறு

2077 தேமருவுபொழிலிடத்துமலர்ந்தபோதைத்
தேனதனைவாய்மடுத்து, உன்பெடையும்நீயும் *
பூமருவிஇனிதமர்ந்துபொறியிலார்ந்த
அறுகாலசிறுவண்டே! தொழுதேன்உன்னை *
ஆமருவிநிரைமேய்த்தஅமரர்கோமான்
அணியழுந்தூர்நின்றானுக்குஇன்றேசென்று *
நீமருவியஞ்சாதேநின்றோர்மாது
நின்நயந்தாளென்றிறையேஇயம்பிக்காணே.
2077 தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத் *
தேன் அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் *
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த *
அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை **
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் *
அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று *
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது *
நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 26
2077 te maruvu pŏzhiliṭattu malarnta potait *
teṉ-ataṉai vāymaṭuttu uṉ pĕṭaiyum nīyum *
pū maruvi iṉitu amarntu pŏṟiyil ārnta *
aṟu kāla ciṟu vaṇṭe! tŏzhuteṉ uṉṉai
ā maruvi nirai meytta amarar-komāṉ *
aṇi azhuntūr niṉṟāṉukku iṉṟe cĕṉṟu *
nī maruvi añcāte niṉṟu or mātu *
niṉ nayantāl̤ ĕṉṟu iṟaiye iyampik kāṇe-26

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Divya Desam

Simple Translation

2077. Her daughter says, “O small bee with six legs and dots on your wings, you and your mate stay happily on flowers and drink honey. I bow to you. Go to the god of the gods who loves the cows and grazes them and stays in beautiful Thiruvazhundur. Stay there and see him. Don’t be afraid. Tell him, ‘I am a girl and love him. ’ and see what he says. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தே மருவு தேன் வெள்ளம் நிறைந்த; பொழில் இடத்து சோலையில்; மலர்ந்த போதை மலர்ந்த மலர்களில் உண்டான; தேன் அதனை தேனை; வாய் மடுத்து பருகி; உன் பெடையும் நீயும் உனது பேடையும் நீயும்; பூ மருவி பூவைத் தழுவி; இனிது அமர்ந்து இனிது அமர்ந்து; பொறியில் ஆர்ந்த கலந்து மகிழும்; அறு கால ஆறு கால்களைய உடைய; சிறு வண்டே! சிறு வண்டே; உன்னை உன்னை; தொழுதேன் வணங்கி யாசிக்கின்றேன்; ஆ நிரை பசுக்கூட்டங்களை; மருவி மேய்த்த விரும்பி மேய்த்தவனும்; அமரர் நித்யஸூரிகளின்; கோமான் தலைவனுமான பெருமான்; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்றானுக்கு நின்றவனிடம்; இன்றே சென்று நீ இன்றே நீ சென்று; அஞ்சாதே பயப்படாமல்; மருவி நின்று பொருந்தி நின்று; ஓர் மாது ஒரு பெண்; நின் நயந்தாள் உன்னை விரும்புகிறாள்; என்று இறையே என்று சிறியதொரு வார்த்தையை; இயம்பிக் காணே சொல்லிப்பார்
thĕn maruvu ḥaving honey flooding fully; pozhil idaththu in the garden,; malarndha pŏdhai with flowers blossoming,; vāy maduththu drinking; thĕnadhanai that honey,; un pedaiyum neeyum your female and you; pūmaruvi well set in the flower; inidhamarndhu and be in union with her;; aṛukāla siṛu vaṇdĕ ŏh the bee having six legs,; poṛiyin ārndha having lots of dots in the body; unnai thozhudhĕn ī prostrate and beg you;; maruvi mĕyththa herded with interest; ā niṛai the groups of cows,; amarar kŏmān and who is the head of nithyasūris,; aṇi azhundhūr ninṛānukku and who is standing in the beautiful place of thiruvazhundhūr,; inṛĕ nee senṛu you go now itself and; anjādhĕ without being afraid,; maruvi ninṛu stand there strong,; iyambik kāṇĕ try to tell ḥim; iṛaiyĕ a little bit, that; ŏr mādhu one female; nin nayandhāl̤ enṛu is being interested in ẏou,

Detailed WBW explanation

thēmaruvu pozhilidatthu – In the abode adorned with gardens perpetually brimming with honey. The term 'maruvu' denotes the constant presence and abundance of honey, while 'pozhil' signifies a garden that alleviates fatigue. These three attributes are also found in Paramapadham, the ultimate realm of bliss. Only if you position us in such an abode of delight,

+ Read more