TNT 2.12

அரங்கனை எண்ணி அயர்க்கின்றாள் என் மகள்

2063 நெஞ்சுருகிக்கண்பனிப்பநிற்கும்சோரும்
நெடிதுயிர்க்கும்உண்டறியாள்உறக்கம்பேணாள் *
நஞ்சரவில்துயிலமர்ந்தநம்பீ! என்றும்
வம்பார்பூம்வயலாலிமைந்தா! என்றும் *
அஞ்சிறையபுட்கொடியேஆடும்பாடும்
அணியரங்கமாடுதுமோ? தோழீ! என்றும் *
எஞ்சிறகின்கீழடங்காப்பெண்ணைப்பெற்றேன்
இருநிலத்துஓர்பழிபடைத்தேன் ஏ! பாவமே.
2063 nĕñcu urukik kaṇ paṉippa niṟkum corum *
nĕṭitu uyirkkum uṇṭu aṟiyāl̤ uṟakkam peṇāl̤ *
nañcu aravil tuyil amarnta nampī! ĕṉṉum *
vampu ār pū vayal āli maintā! ĕṉṉum **
am ciṟaiya puṭkŏṭiye āṭum pāṭum *
aṇi araṅkam āṭutumo? tozhī! ĕṉṉum *
ĕṉ ciṟakiṉkīzh aṭaṅkāp pĕṇṇaip pĕṟṟeṉ *
iru nilattu or pazhi paṭaitteṉ e pāvame-12

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 10-9

Divya Desam

Simple Translation

2063. “My daughter’s heart melts with love for him and her eyes are filled with tears. She stands searching until she is tired. She sighs and doesn’t want to eat or sleep. She says, ‘O Nambi, who rest on the snake bed, you are lord of Thiruvayalāli (Thiruvāli) surrounded with beautiful creepers blooming with flowers. O friend! Shall we go there dance and sing where the Garudā flag flies? Can we go and play in the water in beautiful Srirangam?’ I gave birth to this girl but she doesn’t listen to me. A pity! The world is blaming me for what she does. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சுருகி இப் பெண்ணின் மனம் உருகி; கண் பனிப்ப கண்களில் நீர் துளிக்க; நிற்கும் நிற்கின்றாள்; சோரும் சோர்வடைந்து; நெடிது உயிர்க்கும் பெருமூச்சுவிடுகின்றாள்; உண்டு அறியாள் உணவு உண்பதில்லை; உறக்கம் பேணாள் உறக்கம் கொள்வதில்லை; நஞ்சு அரவில் விஷமுடைய ஆதிசேஷன் மீது; துயில் அமர்ந்த யோக நித்திரை கொள்ளும்; நம்பீ! என்னும் பெருமானே! என்கிறாள்; வம்பு ஆர் பூ மணம் மிக்க பூக்களை உடைய; வயல் ஆலி திருவாலியில் இருக்கும்; மைந்தா! என்னும் எம்பெருமானே! என்கிறாள்; அம் சிறைய அழகிய சிறகையுடைய; புள் கொடியே கருடக் கொடி போல்; ஆடும் பாடும் ஆடுகிறாள் பாடுகிறாள்; தோழீ! தோழீ!; அணி அரங்கம் நாம் திருவரங்கத் துறையிலே; ஆடுதுமோ? நீராடுவோமா?; என்னும் என்று கேட்கிறாள்; என் சிறகின் கீழ் என் கைக்கு; அடங்காப் அடங்காத; பெண்ணைப் பெற்றேன் பெண்ணைப் பெற்றேன்; இரு நிலத்து இந்த உலகில்; ஓர் பழி படைத்தேன் ஒப்பற்ற பழியைதான் அடைந்தேன்; ஏ! பாவமே! என்ன பாவம் செய்தேனோ!
kaṇpanippa niṛkum ṣhe stands with tears overflowing; nenju with mind; urugi melting like water;; sŏrum she faints;; nedidhu uyirkkum she sighs;; uṇdu aṛiyāl̤ she does not know about eating;; uṛakkam pĕṇāl̤ she does not like to sleep;; nanju aravil thuyil amarndha nambee ennum she says ‘ŏh nambee! who is doing yŏga nidhrā lying down on thiru ananthāzhvār who spits poison’;; vambu ār pū vayal āli maindhā ennum she says – ŏh the youthful one who is present in thiruvāli that is surrounded by fields having flowers full of fragrance;; am siṛaiya pul̤ kodiyĕ ādum she is dancing like garudan who is having beautiful wings (beautiful because it serves to transport emperumān) who is like the flag;; pādum and sings;; thŏzhee aṇi arangam ādudhumŏ ennum ŏh friend! Would (we) get to bathe and dance in thiruvarangam?, says she.; peṇṇaip peṝĕn ī who have got such a girl child; en siṛagin keezh adangā who does not stay under my control; ŏr pazhi padaiththĕn have earned unparalleled sin; iru nilaththu in this huge land;; ĕ pāvamĕ! ŏh how sad!

Detailed WBW explanation

nenju … thŏzhee! – These verses describe the various ways in which she experiences the sadness mentioned as "irangum" in the previous pāsuram.

nenju urugi – Her mind, which has no physical form, melted like water; just as a candle melts when near a fire, her mind melted like a substance due to the pain of separation from emperumān. If her mind wouldn’t

+ Read more