TCV 60

உயர் வேங்கடத்தில் நின்றவன்

811 செழுங்கொழும்பெரும்பனி பொழிந்திட * உ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெழுந்து விண்புடைக்கும்வேங்கடத்துள்நின்று *
எழுந்திருந்துதேன்பொருந்து பூம்பொழில்தழைக்கொழும் *
செழுந்தடங்குடந்தையுள் கிடந்தமாலுமல்லையே?
811 ## cĕzhuṅ kŏzhum pĕrum paṉi pŏzhintiṭa * uyarnta vey
vizhuntu ularntu ĕzhuntu * viṇ puṭaikkum veṅkaṭattul̤ niṉṟu **
ĕzhuntiruntu teṉ pŏruntu * pūmpŏzhil tazhaik kŏzhum *
cĕzhun taṭaṅ kuṭantaiyul̤ * kiṭanta mālum allaiye? (60)

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

811. O god of Thiruvenkatam where cool rain falls abundantly and bamboo plants grow tall and touch the sky, aren’t you Thirumāl who rests on the ocean in Kudandai surrounded by cool blooming groves dripping with honey?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செழுங் கொழும் இடைவிடாத தாரைகளாக விழும்; பெரும்பனி பொழிந்திட கனத்த மூடுபனி பொழிய; உயர்ந்த வேய் உயந்துள்ள மூங்கில்கள்; விழுந்து தரையில் சாய்ந்து; உலர்ந்து எழுந்து உலர்ந்து எழுந்து; விண்புடைக்கும் ஆகாசத்தை முட்டும்; வேங்கடத்துள் திருப்பதி மலையிலே; நின்று நிற்பவனே!; எழுந்திருந்து வண்டுகள் மேலே கிளம்பி; தேன் தேன் பருக கீழே இறங்கி; பொருந்து வாழ நினைத்து; தழைக் கொழும் தழைத்து பருத்த; பூம் புஷ்பங்கள் நிறைந்த; பொழில் சோலைகளை உடையதும்; செழும் செழிப்பான; தடம் குளங்களையுடையதுமான; குடந்தையுள் திருக்குடந்தையிலே; கிடந்த சயனித்திருக்கும்; மாலும் அல்லையே? திருமால் அன்றோ நீ?